புத்தக வெளியீட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழாவும் தேசாந்திரி பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவும் டிசம்பர் 25  செவ்வாய்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது இடம் ருஷ்ய கலாச்சார மையம் ஆழ்வார் பேட்டை சென்னை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

சாகித்ய அகாதமி விருது

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது எனது சஞ்சாரம் நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள். எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள்.  வாசகர்கள் நண்பர்கள். அனைவருக்கும் அன்பும் நன்றியும்

எலியா கஸான்.

East of Eden திரைப்படத்தில் ஒரு தந்தை தனது பிள்ளைகளிடம் அம்மா இறந்துவிட்டார் என்று பொய் சொல்லி வளர்க்கிறார். ஆனால் அம்மா இறந்து போகவில்லை. அப்பாவோடு சண்டையிட்டு விலகிப் போய்விட்டார். இப்போது அம்மா அருகிலுள்ள ஊர் ஒன்றில் சூதாட்டவிடுதி ஒன்றை நடத்துகிறார் என்பதை அறிந்து அம்மாவைக் காணச் செல்கிறான் இளையமகன். அம்மாவைச் சந்திப்பது எளிதாகயில்லை. நிறைய கெடுபிடிகள். அவள் தனது கடந்தகாலத்தை மறைத்து வாழுகிறாள். அந்தச் சூதாட்ட விடுதிக்குள் ரகசியமாக நுழைந்து அம்மாவை சந்திக்கிறான். எதற்காக என்னைத் …

எலியா கஸான். Read More »