காணொளி

நேற்று மௌனி பற்றி நான் ஆற்றிய உரையை ஸ்ருதி டிவி பதிவு செய்து வலையேற்றம் செய்துள்ளார்கள். ஸ்ருதிடிவி கபிலனுக்கு மனம் நிரம்பிய நன்றி •• டிஸ்கவரி புக் பேலஸ் & தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் உலகப் புத்தக தினம் சிறப்பு நிகழ்வு ‘மெளனியைக் கொண்டாடுவோம்’ – எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை S.Ramakrishnan speech https://www.youtube.com/watch?v=yRRwfaW7nqk

வாழ்த்துகள்

உலகப் புத்தக தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். •• இன்று   A russian Childhood  என்ற நூலை வாசித்தேன். தஸ்தாயெவ்ஸ்கி காலத்தை சேர்ந்த Sofya Kovalevskaya  என்ற இளம்பெண் தான் எழுதிய சிறுகதையை தஸ்தாயெவ்ஸ்கி படிக்க வேண்டும் என்பதற்காக தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு இளம் எழுத்தாளரின் கதையை படித்து தேவையான ஆலோசனைகளை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்தஸ்தாயெவ்ஸ்கி. பின்பு அந்த பெண் அவரைத் தேடி வந்து நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அவர்கள் சந்திப்பு எப்படியிருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி …

வாழ்த்துகள் Read More »

கோபமெனும் முகத்திரை

A Man Called Ove ஸ்வீடிஷ் நாட்டுத் திரைப்படம். 2012ல் Fredrik Backman எழுதிய நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இது ஒரு Feel-Good Movie. 59 வயதான உவே தனியே வசிக்கிறார். மிகுந்த கோபக்காரர். அவர் வசிக்கும் காலனியில் சின்னஞ்சிறு தவறுகள் நடந்தால் கூடச் சண்டை போடக்கூடியவர். அவரும் நண்பர் ரூனும் இணைந்து அந்தக் காலனிக்கான  நல சங்கத்தை உருவாக்கினார்கள். ரூன் சுயநலமாக நடந்து கொண்டு அவரைச் சங்க பொறுப்பிலிருந்து  நீக்கிவிடுகிறார். ஆனாலும் உவே விதிகளைக் கறாராகக் கடைபிடிக்கக் …

கோபமெனும் முகத்திரை Read More »

மௌனியைக் கொண்டாடுவோம்

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 மாலை 5 மணிக்கு  எழுத்தாளர் மௌனி குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே. கே. நகர். சென்னை 78 நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து  கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

புறாப்பித்து

– சிறுகதை தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது.  இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். …

புறாப்பித்து Read More »

விமர்சனப் போட்டி

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி •••• அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி . இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை  அந்திமழை அழைக்கிறது. பரிசு விவரங்கள்: •         முதல் பரிசு – ரூ.10000 •         இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு] •         மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள …

விமர்சனப் போட்டி Read More »

வாழ்த்துகள் லிங்கம்

உலகப் புத்தக தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் வேலூர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறுகிறார். இந்த விருதிற்கு முழுத்தகுதி கொண்டவர் லிங்கம். தேர்ந்த இலக்கியப்புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க கூடியவர். அவரது வீடே ஒரு நூலகம் போலதானிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வரும் லிங்கம் இந்த விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.  அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல்23 மாலை 5 …

வாழ்த்துகள் லிங்கம் Read More »

நிலாச்சோறு

கூடி உண்ணும் போது உணவிற்குத் தனிசுவை வந்துவிடுகிறது. அதுவும் நிலாவெளிச்சத்தில் அனைவரும் ஒன்று கூடி அருகமர்ந்து உண்ணுவது இன்பமானது. சிறுவயதில் பல இரவுகள் அனைவரும் ஒன்றுகூடி அமர ஆச்சி சோற்றை உருட்டி உருட்டி தருவார். அந்த உருண்டைக்கென்றே தனிருசியிருந்தது. அந்தக் காலத்தில் சித்ரா பௌணர்மி நாளில் ஆற்றின் கரைகளுக்குச் சென்று உணவருந்தும் வழக்கமிருந்தது. வண்டி போட்டுக் கொண்டு ஆற்றின் கரைதேடி போவோம். மணலில் அமர்ந்தபடியே நிலவின் வெண்ணொளியை ரசித்தபடியே சாப்பிட்ட நினைவு அடிமனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது திடீரென …

நிலாச்சோறு Read More »

விடுதலை நாயகன்

ஸ்பானிய காலனியாக இருந்த நாடுகளின் விடுதலைக்குப் போராடி லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர கனவு கண்டவர் சிமோன் பொலிவார். இவரது வாழ்க்கை வரலாறு The Liberator என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது. பொலிவார் வெனிசூலாவின் உயர்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. கிரியோல் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஸ்பானிய அரசில் உயர்பதவிகளை வகித்தார்கள். சிமோனின் குடும்பத்திற்குப் பெரிய பண்ணைகளும், சுரங்கங்களுமிருந்தன. அதில் வேலை செய்யப் பண்ணையடிமைகள் இருந்தார்கள். வெளிநாட்டில் ஆரம்பக் …

விடுதலை நாயகன் Read More »

தியான நடை

வேகமும் பரபரப்புமாக நகரும் வாழ்க்கைக்கு எதிராக மிகமிக மெதுவாக நடந்து போகிறார் ஒரு பௌத்த துறவி. ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைப்பது கவனமாக, மிகப்பெரிய செயல்போலிருக்கிறது. உண்மையில் நடத்தலை ஒரு தியான வழியாகக் கருதுகிறது பௌத்தம். WALKING MEDITATION எனப்படும் தியானமுறையில் காலை தரையில் ஊன்றி உடலின் முழுமையை உணருவதும் ஒவ்வொரு அடியிலும் முழு விழிப்புணர்வுடன் நடத்தலும் பயிற்றுவிக்கபடுகிறது. தெற்கு பிரான்சிலுள்ள Marseilles கடற்கரை நகரில் பௌத்த துறவி மிகமெதுவாக நடப்பதே படம். அவரைப் பின்தொடருகிறார் ஒரு …

தியான நடை Read More »