அநீதி

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கலவரக்காட்சிகளை வீடியோவில் பார்த்த போது எழுந்த கேள்வி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களா வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். யாரோ புல்லுருவிகள் ஊடுபுகுந்திருக்கிறார்கள்.. ஆனால் இதற்காக பழிவாங்கப்பட்டது போராட்டக்கார்களின் உயிர். துப்பாக்கியை உயர்த்தியபடியே வாகனத்தின் மீது பவனி வரும் காவலர்களைப் பாருங்கள். கார்ப்பரேட் நலம் காக்க எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது புரியும் . நூறு நாட்களுக்கும் மேலாக அமைதிவழியில் …

அநீதி Read More »

சொற்களின் தோகை

அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதைகள். அனார் கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் வசித்துவருகிறார். சமகால தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ஜின்னின் இரு தோகை கவிதைநூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது அனாரின் கவிதைகள் அன்றாட வாழ்விலிருந்து தாவிப் பறப்பவை. அவர் புறஉலகின் நிகழ்வுகளை விடவும் அகவுலகின் தத்தளிப்புகளை, எழுச்சிகளையே அதிகம் எழுதுகிறார். …

சொற்களின் தோகை Read More »

பெங்களுரில்

திரைப்பட பணி ஒன்றின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெங்களுருவில் இருந்தேன். நண்பர்களை சந்திக்க நேரமில்லை. மகாலிங்கம் மட்டும் தினமும் வந்து  சந்தித்து பல்வேறு உதவிகள் செய்து கொடுத்தார். தேர்தல் நடக்கிற பரபரப்பே இல்லாமல் இருந்தது.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை. வெயிலே தெரியவில்லை.  நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்பினார்கள்.  பணிச்சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை.  விரைவில் பெங்களுருவில் ஒரு வாசக சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டு வருகிறேன். ஏற்பாடுகள் முடிந்தவுடன் அறிவிக்கிறேன் …

பெங்களுரில் Read More »

அவரும் நானும்

அவள் விகடன் இதழில் வெளியாகியுள்ள வசந்தா அக்கா குறித்த கட்டுரை. அன்பு அக்கறை அக்கா! – எஸ்.ராமகிருஷ்ணன் அவரும் நானும் ஆர்.வைதேகி “ `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா? `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ – பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். “அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம்!’’ என்று உறுதியளித்த பிறகே பேசவும் சம்மதிக்கிற அவரது மாண்பு மகிழ்ச்சியளிக்கிறது. …

அவரும் நானும் Read More »

புதிய தொடர்

தி இந்து குழுமம் துவங்கியுள்ள காமதேனு இதழில் புதிய பத்தி ஒன்றை துவங்கியிருக்கிறேன். முடிவற்ற சாலை என்ற இந்த பத்தி எனது பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறது

கிரேசியா டெலடா

நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் கிரேசியா டெலடா (Grazia Deledda.) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது The Mother என்ற நாவலை தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மிக அற்புதமான நாவல். பாதிரியாக உள்ள தனது மகன் பால் ஒரு இளம்பெண்ணுடன் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்னையின் தவிப்பே நாவல். கைம்பெண்ணாகப் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த அன்னை, பால் மதகுருவாகப் பணியேற்றதும் மதகுருவின் தாய் என்ற புனித அடையாளத்தைப் பெறுகிறாள். …

கிரேசியா டெலடா Read More »

கதை சொல்கிறார்கள்

கோடைவிடுமுறையில் குழந்தைகளை ஒன்று கூட்டி எனது கடவுளின் நாக்கு புத்தகத்திலுள்ள கதைகளைப் பகிர்ந்துவருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள். துறையூரைச் சேர்ந்த பெருமாள் என்ற ஆசிரியரும் அவரது துணைவியாரும் தங்கள் வீட்டிலே இந்தக் கதை சொல்லும் நிகழ்வை நிகழ்த்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். தி இந்து நாளிதழில் கடவுளின் நாக்கு தொடராக வந்த போது விரும்பி வாசித்தோம். இப்போது அந்த நூலிலுள்ள கதைகளை மாணவர்களை எடுத்துச் சொல்கிறோம். சிறுவர்கள் ஆர்வமாகக் …

கதை சொல்கிறார்கள் Read More »

பிரபஞ்சன் பாராட்டுவிழா

கடந்த ஆண்டு சென்னையில் எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம் என்ற சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்டி  அளித்தோம். அந்த விழாவிற்கு வந்திருந்த புதுவை முதல்வர் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிரபஞ்சனை நாங்களும் சிறப்பித்துக் கொண்டாடுவோம் என்று உறுதி அளித்தார். அதன்படி கடந்த வியாழன் ( 3.05.2018) அன்று மாலை புதுவையில் அரசு சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு சிறப்பான விழா நடத்தி பத்து லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார்கள். அந்த நிகழ்வில் கலந்து …

பிரபஞ்சன் பாராட்டுவிழா Read More »

அம்ரிதா ஏயெம்

ஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம்ரிதா ஏயெம். விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற இவரது சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா இலங்கை சென்றிருந்த போது கொடுத்து வாசிக்கச் சொன்னார். விமானத்தில் திரும்பி வரும் போது ஒன்றிரண்டு கதைகளை வாசித்தேன். பின்பு தொகுப்பை எங்கோ வைத்துவிட்டுக் காணாமல் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று  வேறு ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில் அந்தச் சிறுகதை தொகுப்பு கையில் அகப்பட்டது. உடனே வாசித்து முடித்தேன். அம்ரிதா ஏயெம் இருபத்தைந்து …

அம்ரிதா ஏயெம் Read More »