உலகைப் படம்பிடித்தல்.
அக்னேஸ் வர்தா பிரெஞ்சு சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் . உலக அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர். பெல்ஜியத்தில் பிறந்த இவர் பெண்ணிய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். சிறந்த புகைப்படக்கலைஞரும் கலை வரலாற்று ஆய்வாளருமான இவர் சோர்போன் பல்கலைகழகத்திலிருந்து இலக்கியம் மற்றும் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். வார்தா தனது வாழ்க்கையை ஒரு புகைப்படக்கலைஞராகவே துவக்கினார். கேமிராவை ஒரு பேனாவை போல சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை பின்பற்றியவர் வார்தா. இவரது திரைப்படங்கள் பரிசோதனை படங்களாகக் கருதப்படுகின்றன. …