தேசாந்திரி புதிய வெளியீடுகள்- 2

கூழாங்கற்கள் பாடுகின்றன ஜென் கவிதைகள் குறித்த நூல் விலை 75 கோடுகள் இல்லாத வரைபடம் புகழ்பெற்ற வரலாற்று யாத்ரீகர்களைப் பற்றிய நூல் விலை ரூ 75 புத்தக கண்காட்சியின் போது முதல் வெளியீடாக வந்து விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளன உலகை வாசிப்போம் உலக இலக்கியத்தின் சாதனையாளர்களைப் பற்றிய நூல் விலை 200 தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் புதிய சிறுகதைத் தொகுப்பு விலை 150 காட்சிகளுக்கு அப்பால் உலக சினிமா குறித்த நூல் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள்- 2 Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் 1

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ள புதிய நூல்கள் உப பாண்டவம் மகாபாரதம் குறித்த நாவல். பத்து பதிப்புகளுக்கும் மேலாக விற்பனையில் சாதனை படைத்த நாவல். விலை ரூ 375 சஞ்சாரம் நாதஸ்வரக்கலையை மையமாகக் கொண்ட நாவல். விலை  340 உலக இலக்கியப் பேருரைகள் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, அராபிய இரவுகள், ஹோமர், ஷேக்ஸ்பியர் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்புநூல் விலை 325 செகாவ் வாழ்கிறார் உலகின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாறும் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் 1 Read More »

ஸ்ரீதேவி

இந்திய திரையுலகின் ஒப்பற்ற நாயகி ஸ்ரீதேவி மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்பதுகளின் இளைஞர்களில் ஸ்ரீதேவியைக் காதலிக்காதவர்களேயில்லை. ஸ்ரீதேவி பற்றி இயக்குனர் ராம் கோபால் வர்மா எழுதிய கட்டுரையை கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் தமிழில் மொழியாக்கம் செய்து சில ஆண்டுகள் முன்பாக வெளியிட்டிருந்தார் அழியாத நினைவுகளில் வாழும் ஸ்ரீதேவிக்காக  இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன் •• எனது ஸ்ரீ – ராம் கோபால் வர்மா தமிழில்: ஷங்கர் விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, …

ஸ்ரீதேவி Read More »

விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள். புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது. …

விஷமாகும் காய்கனிகள் Read More »

எழுத்தாளனின் அரசியல்

நார்வீஜிய எழுத்தாளர் நட் ஹாம்சன் ஹிட்லருக்கு ஆதரவு அளித்துப் பேசியும் எழுதியும் வந்தார் என்பது இன்றைக்கும் விமர்சிக்கபடும் விஷயம் ( இவர் பெயரை நுட் ஹாம்சுன் என உச்சரிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழில் இவர் நட் ஹாம்சன் என்றே அறியப்படுகிறார் ) நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான ஹாம்சனின் புகழ்பெற்ற நாவல் தமிழில் நிலவளம் எனக் க.நா.சு மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த அற்புதமான நாவலை க.நா.சு எப்படித் தேடிக்கண்டுபிடித்து வாசித்து மொழி பெயர்த்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது உலகின் …

எழுத்தாளனின் அரசியல் Read More »

பாண்டிச்சேரியில் ஒரு நாள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காகப் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். புகைப்படக்கலைஞரும் எனது நண்பருமான இளவேனில் வரவேற்று சிறப்பான உபசரிப்புகளைச் செய்தார். மாலையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். முன்னதாகத் திரைக்கலைஞர் சிவக்குமார் அவரைக் காண்பதற்காக வந்திருந்தார். சிவக்குமார் எழுத்தாளர்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர். கி.ரா குடும்பத்துடன் அவர் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றார். கி.ரா பூரண ஆரோக்கியத்துடன் தெளிவான நினைவாற்றலுடன் இருந்தார். கி.ராவைச் …

பாண்டிச்சேரியில் ஒரு நாள். Read More »

பால்சாக்கின் சிற்பம்

நவீன சிற்பங்களின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் சிற்பி ரோடின் பற்றிய Rodin (2017) திரைப்படம் பார்த்தேன். ஒவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் எனப் பலரது வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பிரெஞ்சில் வெளியாகியுள்ளன. கலையாளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க எடுப்பது தனிப்பிரிவாகவே உள்ளது. உண்மையில் அதுவொரு சவால். ஒரு கலைஞனின் முழுவாழ்க்கையைத் திரையில் காட்டிவிட முடியாது. ஆகவே அவரது வாழ்வின் பிரதான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டே திரைப்படம் உருவாக்கபடுகிறது. ரோடினுக்கும் அவரது மாணவியும் காதலியுமாக இருந்த கேமிலோ கிளெடலிற்குமான உறவும் …

பால்சாக்கின் சிற்பம் Read More »

உருமாறும் புத்தகங்கள்

இத்தாலிய எழுத்தாளர் உம்பர்தோ ஈகோவும் பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜீன் கிளாட் கேரியரும் சந்தித்துப் புத்தகங்கள் குறித்து உரையாடிதன் தொகுப்பாக வெளிவந்துள்ளது This is Not the End of the Book. இரண்டு அறிவுஜீவிகளின் சந்திப்பும் உரையாடலும் எத்தனை ஆழமானதாக, விரிந்த தளத்தில் இருக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். இருவரது பேச்சின் பொதுவிஷயமாக அமைத்திருப்பது நூலகமும் அரிய நூல்களும். இருவருமே முதன்முதலாக அச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 1500 காலகட்டத்தைச் சேர்ந்த அரிய …

உருமாறும் புத்தகங்கள் Read More »

நீதியின் பதாகை

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பரிந்துரையிலுள்ள Three Billboards Outside Ebbing, Missouri படத்தை நேற்று பார்த்தேன். இப்படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றுள்ளது. நிச்சயம் இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகள் கிடைக்ககூடும். குறிப்பாக நீதிக்காகப் போராடும் தாயாக நடித்துள்ள Frances McDormand விருதை வெல்வார் என நம்புகிறேன். ஏழு மாதங்களுக்கு முன்பு, வன்புணர்ச்சி செய்து கொலை செய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் எனக் கேட்டு மில்ட்ரட் போராடுகிறாள். காவல்துறை குற்றவாளி யாரெனக் கண்டறிந்து …

நீதியின் பதாகை Read More »

அஞ்சலி

இயல் விருது வாங்குவதற்காக கனடாவிற்குச் சென்றிருந்த போது கவிஞர் செழியனைச் சந்தித்து உரையாடினேன். இலங்கையிலிருந்து தான் உயிர்தப்பிவந்த நிகழ்வை  வேடிக்கையான சம்பவத்தை நினைவுகூறுவது போல சிரிப்போடு விவரித்தார். கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. நாடகங்கள் குறித்து   நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ‘அரங்காடல்’  கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படும் தீவிர நாடக முயற்சி. மனவெளி கலைக் குழுவினர் இதை ஒருங்கிணைப்பு செய்து நடத்துகிறார்கள். அதில் செழியனின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கிறது அவரது கவிதைநூல் ஒன்றை எனக்குப் …

அஞ்சலி Read More »