காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே மத்திய அரசு தாமதிக்கிறது. அரசியல் சுயலாபத்திற்காக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வன்முறையிது.
தமிழக விவசாயிகள் நதிநீர் பிரச்சனையில் நீதிக்காக பல்லாண்டுகளாக காத்துகிடக்கிறார்கள். உச்சநீதிமன்றம் நீதி வழங்கிய போதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு மறுக்கிறது.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தொடர்போராட்டங்களை ஆதரிக்கிறேன்.
இது விவசாயிகளின் பிரச்சனையில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனை.
உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளுடன் நாம் கரம் கோர்த்து நிற்க வேண்டிய காலமிது.
மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கபட வேண்டும். அது ஒன்றே தீர்வு.
••