புதிய வெளியீடுகள்
தேசாந்திரி பதிப்பகம் எனது பதின், இடக்கை நாவல்களின் சிறப்பு பதிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னை புத்தக கண்காட்சி அரங்கு எண் 391 , 392ல் கிடைக்கும் பதின் விலை ரூ 235 இடக்கை விலை ரூ 375
தேசாந்திரி பதிப்பகம் எனது பதின், இடக்கை நாவல்களின் சிறப்பு பதிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னை புத்தக கண்காட்சி அரங்கு எண் 391 , 392ல் கிடைக்கும் பதின் விலை ரூ 235 இடக்கை விலை ரூ 375
13.01.2018 Shrutitv வழியாக வாசகர்களுடன் கலந்துரையாடல் Facebook Live மூலமாக இன்று இரவு 8.00 (ist) மணிக்கு நேரலையாக ஒளிப்பரப்பாக உள்ளது. விருப்பமான வாசகர்கள் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். புத்தக கண்காட்சி தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 391 392ல் இருந்து உங்களுடன் உரையாட இருக்கிறேன் #FBLive #bookstall stall no 391&392 தேசாந்திரி -Desanthiri
நேற்று மாலை சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக துவங்கியது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 391 & 392னை தயார்படுத்தும் பணி காலையிலிருந்து நடைபெற்றது. நான்கு மணிக்கு புத்தக காட்சிக்குச் சென்றேன். ஸ்ருதிடிவி நேரடியாக புத்தக கண்காட்சி குறித்த செய்திகளை சிறப்பாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் பற்றிய எனது நேர்காணல் ஒன்றினை ஸ்ருதி டிவி பகிர்ந்திருக்கிறார்கள். ஸ்ருதி டிவி கபிலனுக்கு நன்றி நேற்று மாலை எழுத்தாளர்கள் பா.ராகவன், விமலாதித்த மாமல்லன், தமிழ்மகன், லட்சுமி சரவணக்குமார் …
புத்தக கண்காட்சியில் தினமும் வாசகர்கள் என்னைச் சந்திக்கலாம். கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம். இன்று துவங்கி புத்தக கண்காட்சி முடியும் ஜனவரி 22 வரை தினமும் 4 மணி முதல் 8 :30 வரை தேசாந்திரி பதிப்பகம் அரங்கு 391 &392ல் இருப்பேன். ஜனவரி 12, மற்றும் 19 ஆகிய நாட்களில் மாலையில் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ஐந்து மணி வரை மட்டுமே புத்தக கண்காட்சியில் இருப்பேன்.
முதல்கட்டமாக ஏழு நூல்களை வெளியிட்ட தேசாந்திரி பதிப்பகம் அடுத்த கட்டமாக பதினைந்து நூல்களை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வருகிறது.
எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. அன்பிற்குரிய வண்ணதாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். •• விளக்கு விருது 1996முதல்அளிக்கப்பட்டுவருகிறது. தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களை முறையாகக் கண்டறிந்து வழங்கப்படும் கௌரவிக்க விருது. இந்த ஆண்டுக்கான விளக்கு விருதிற்கு கவிஞர் சமயவேலும் எழுத்தாளர் ராஜ்கெளதமனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெற்ற இருவருக்கும் என் மனம்கனிந்த வாழ்த்துக்கள். ••
2018 புத்தாண்டினைக் கொண்டாடும் விதமாக ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் பற்றி நான் சிறப்புரை நிகழ்த்தினேன். அதன் காணொளி Writer S.Ra speech on Ivan turgunev https://youtu.be/S4X8Y4YzS-8 ** யூடியூப்பில் எனது உரைகளைக் காண்பதற்கான தேசாந்திரி சேனல் ஒன்றை துவக்கியிருக்கிறது. அதை Subscribe செய்து உதவுங்கள். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 ••
லியோ டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, பாஷோ, ஹோமர், ஹெமிங்வே, ஆயிரத்தோரு அராபிய இரவுகள், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட ஏழு இலக்கியப்பேருரைகளின் டிவிடி புத்தக கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது single dvd : Rs.100 set : Rs.600 தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண்கள் 391 & 392 •• தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:desanthiripathippagam@gmail.com
அட்சரம் என்ற இலக்கிய இதழை நான் 2001ல் நடத்தினேன். நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட இதழ்களில் மீதமிருப்பவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒரு இதழின் விலை ரூ 10 கிடைக்கும் இடம் புத்தக கண்காட்சியில் : தேசாந்திரி பதிப்பகம்அரங்க எண் 391 & 392 *** தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:desanthiripathippagam@gmail.com
விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள எனது நூல்களான துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, உணவு யுத்தம், சிறிது வெளிச்சம், இந்திய வானம் ஆகிய நூல்கள் யாவும் தேசாந்திரி பதிப்பக அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும் அரங்கு எண்கள் 391 392