உலகை வாசிப்போம்

தேசாந்திரி பதிப்பக வெளியீடு -3 உலக இலக்கியம் குறித்து தீராநதியில் எழுதிவந்த தொடரில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. அட்டை வடிவமைப்பு ஹரிபிரசாத்

நாவலெனும் சிம்பொனி

தேசாந்திரி பதிப்பக புதிய வெளியீடு -2 தமிழ் மற்றும் பிறமொழி நாவல்கள் குறித்த கட்டுரைகளும் இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளுக்கும் கொண்ட தொகுப்பு. அட்டை வடிவமைப்பு  : ஹரிபிரசாத்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு. 16 சிறுகதைகள் உள்ளன. சைக்கிள் கமலத்தின் தங்கை  சிறுகதைத்தொகுப்பிற்கு பின்னால் வெளியான எனது சிறுகதைகளைக் கொண்டது எனது மகன் ஹரிபிரசாத் அட்டையை வடிவமைப்பு செய்துள்ளான். தேசாந்திரி பதிப்பகத்தின் முதல்நூலாக வெளிவருகிறது

துவக்கவிழா

நான் புதிதாக துவங்கியுள்ள தேசாந்திரி பதிப்பகத்தின் துவக்கவிழா டிசம்பர் 25 திங்கள்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது. இதில் எனது புதிய நூல்கள் யாவும் வெளியிடப்படவுள்ளன. இதுவரை பல்வேறு பதிப்பகங்களில் வெளியாகிவந்த எனது நூல்கள் யாவும் இனி தேசாந்திரி பதிப்பகம் மூலம் மட்டுமே வெளியாகும்.  வேறு பதிப்பகங்கள் எனது நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனது புத்தகங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்கள். நண்பர்கள், புத்தக கடை உரிமையாளர்கள். ஊடகம் மற்றும் இணையதள …

துவக்கவிழா Read More »

வான்கோவின் கடைசி கடிதம்

ஓவியர் வான்கோவின் (Vincent vanGogh)வாழ்க்கை குறித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் LOVING VINCENT. திரையில் இப்படத்தைக் காண்பது பரவசமூட்டுகிறது. வான்கோவின் ஒவியங்கள் உயிர்பெற்று கண்முன்னே கடந்து போகின்றன. அவர் வரைந்த உருவங்கள் நம்முன்னே நடமாடுகிறார்கள். வான்கோவின் சீற்றமிக்கக் கோடுகள் திரையில் அலைபோல எழுந்து மறைகின்றன. வான்கோவின் நீலம் வான்கோவின் மஞ்சள், சிவப்பு என அவரது வண்ணக்கலவைகளே படத்தின் ஆதாரவண்ணங்கள். ஒவியத்திலிருந்தே ஒரு திரைப்படத்தை உருவாக்கமுடியும் என்ற நவீன தொழில்நுட்பத்தின் சாதனைப்படைப்பு இதுவென்பேன். அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் …

வான்கோவின் கடைசி கடிதம் Read More »

அறம் வென்றது

கோபி நயனார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அறம் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். அற்புதம். தமிழ்சினிமா பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படத்தை இயக்கியிருக்கிறார் கோபி நயினார். பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற மாயையை உடைத்து அரங்கு நிரம்பி வழிகிறது. கடைசிக்காட்சியின் போது அருகிலுள்ள இருக்கையில் இருந்தவர்கள் பீறிடும் கண்ணீரை துடைக்கமுடியாமல் விசும்பினார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திரையில் வெளிப்படும் உண்மை. திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை. மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து …

அறம் வென்றது Read More »

கடைசி வைஸ்ராய்

Gurinder Chadha இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்Viceroy’s House. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். லண்டனில் வசிக்கும் குரிந்தர் Bend It Like Beckham, Bride and Prejudice போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர். இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் தேசப்பிரிவினையை எதற்காக உருவாக்கினார். அவர் முன்னிருந்த சவால்கள் எவை என்பதையே இப்படம் சித்தரிக்கிறது. சிறந்த கலைவடிவமைப்புடன் நேர்த்தியான ஒளிப்பதிவுடன் உருவாக்கபட்டுள்ள இப்படம் வைஸ்ராய் இல்லத்தின் பிரம்மாண்டத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இன்றைய ஜனாதிபதி மாளிகையே அன்றைய வைஸ்ராய் மாளிகை.  ஆகவே அதன் …

கடைசி வைஸ்ராய் Read More »

ஷார்ஜா – 3

அபுதாபி நண்பர்களுடன் ஷேக் சையத் மசூதிக்குள் நுழைந்த போது கனவுலகிற்குள் நுழைந்தது போலவே இருந்தது. சலவைக்கல்லால் உருவாக்கபட்ட பெருங்கனவாகக் கலைநுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது மசூதி. நவீனகாலத்திலும் மரபின் தொடர்ச்சியாகக் கட்டிடக்கலையை வளர்த்தெடுக்கமுடியும் என்பதற்கான சாட்சியாக நின்று கொண்டிருந்தது இம் மசூதி. கவிழ்த்திவைக்கபட்ட வெண்ணிற கும்பா போன்ற பிரம்மாண்டமான குவிமாடங்கள். இருபுறமும் மிதமான நீலவெளிச்சம், நான்கு பக்கமும் வான்நோக்கி உயர்ந்திருக்கும் மினார்கள். செம்பினால் செய்யப்பட்டுப் பொன்பூச்சுப் பூசப்பட்ட வேலைப்பாடுகளுடன் தூண்கள், சுவர்களில் பூவேலைப்பாடுகள். நடைபாதையெங்கும் மஞ்சளும் சிவப்பும் கலந்த …

ஷார்ஜா – 3 Read More »

சிங்கப்பூரில்

Singapore Writers Festival 2017 லில் கலந்து கொள்வதற்காக வெள்ளிகிழமை சிங்கப்பூர்  செல்கிறேன். மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன் 11/11/2017 1:30 – 3:00pm The Arts House (Screening Room) இளம் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் எழுத்துலகில் அவர்களுக்குக் காத்திருக்கும் வாய்ப்புகளையும் பற்றிய குழு விவாதம் , அதை ஒருங்கிணைத்து நடத்துகிறேன் •• 12/11/2017 2:30-3:30pm The Arts House (Screening Room) அறத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் அற இலக்கியங்களின் பங்களிப்பு …

சிங்கப்பூரில் Read More »

ஷார்ஜா பயணம் – 2

எந்த வெளிநாட்டிற்குப் போனாலும் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களை நான் காண்பதில்லை. ஒருவேளை அந்த இடம் மிகவும் முக்கியமானது எனக்கருதினால் ஊருக்குக் கிளம்பும் கடைசி நாளில் அதைக் காண்பேன். ம்யூசியம், ஆர்ட் கேலரி, பழமையான கோட்டைகள். நினைவகங்கள், இசைக்கூடங்கள், நூலகங்கள், புத்தக கடைகள், அறிவியல் கண்காட்சிகள், இயற்கை எழில் நிரம்பிய இடங்கள்  இவற்றைத் தான் விருப்பமாகத் தேடிச் சென்று காண்பேன். இசைநிகழ்ச்சிகள். நாடகங்கள். கலைநிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்பேன். ஆகவே துபாய், ஷார்ஜா பயணத்திலும் ம்யூசியம் ஆர்ட் …

ஷார்ஜா பயணம் – 2 Read More »