புத்தகங்களுடன் புத்தாண்டினைக் கொண்டாடும் விதமாக டிஸ்கவரி புக் பேலஸ் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதில் இரவு 8 : 30 மணிக்கு எனது புதிய நூலான கடவுளின் நாக்கு குறித்த அறிமுகவிழா நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து இரவு 9 :30 மணிக்கு ரஷ்ய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை வழங்கயிருக்கிறேன்
ரஷ்ய இலக்கியத்தின் நாயகர்கள் பலரைப் பற்றி முன்னதாகப் பேசியிருக்கிறேன். துர்கனேவ் பற்றி முதன்முறையாக உரையாற்ற இருக்கிறேன்.
இவான் துர்கனேவின் மூன்று காதல்கதைகள், வேட்டைக்காரனின் குறிப்புகள், தந்தையும் தனியர்களும் போன்ற நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன.

1857 -ல் துர்கனேவ் எழுதிய ஆஸ்யா’ என்ற குறுநாவலின் மொழிபெயர்ப்பு சீமானின் திருமணம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது

