குங்குமம் இதழில்

இவ்வார குங்குமம் இதழில் எனது குடும்பம் குறித்த சிறப்புக்கட்டுரை வெளியாகியுள்ளது. நேர்காணல் செய்து சிறப்பாக எழுதிய கதிர்வேலனுக்கும் வெளியிட்ட கே.என். சிவராமனுக்கும் நன்றி நேர்த்தியான புகைப்படங்களை எடுத்த வின்சென்டிற்கு  அன்பும் நன்றியும்

பதின் மதிப்புரை

இம்மாத செம்மலர் இதழில் தோழர் எஸ்.ஏ.பி பதின் நாவல் குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார் நன்றி  : செம்மலர் எஸ். ஏ. பெருமாள்

பதின் கலந்துரையாடல்

பிப்ரவரி 12 ஞாயிறு மாலை 6 மணிக்கு  டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் எனது பதின் நாவல் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் நிகழ்வினை டிஸ்கவரி வாசகவட்டம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது

அஞ்சலி

எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் இன்று காலமாகிவிட்டார். சிவக்குமாரை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். நல்ல எழுத்தாளன். வேடிக்கையாகப் பேசக்கூடியவன். அவனது மறைவு ஆறாத் துயரை உருவாக்குகிறது. எனது கண்ணீர் அஞ்சலிகள்

காணாமல் போனவன்

ஆஸ்கார் விருதிற்கான சிறந்த படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது Lion திரைப்படம். ஆஸ்திரேலியத் தயாரிப்பான இப்படத்தின் கதைக்களம் இந்தியா.  ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் நடித்த தேவ் படீல் முக்கிய நடிகர். படத்தின் இயக்குனர் Garth Davis.  இது இவரது முதற்படம் A Long Way Home / Saroo Brierley என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது. ஐந்து வயதில் வீட்டை விட்டு ஒடி காணாமல் போய் ஆஸ்திரேலியத் தம்பதிகளால் தத்துப்பிள்ளையாக …

காணாமல் போனவன் Read More »

ராஜஸ்தான் பயணம்

பிப்ரவரி இறுதியில் ஒரு வாரம் ராஜஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.  அங்கே சிறிய உதவி தேவைப்படுகிறது ராஜஸ்தானில் வசிக்கும் இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் தொடர்பு கொள்ளவும். எனது மின்னஞ்சல் writerramki@gmail.com

திருச்சியில்

பதின் நாவலுக்கான அறிமுகக்கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது களம் இலக்கிய அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது 29. 01.2017 ஞாயிறு  மாலை 5   :30  மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா ஹோட்டல் அரங்கில்  இந்நிகழ்வு நடைபெறவுள்ளது இதில் இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

பெரம்பலூரில்

27.01.2017  வெள்ளிகிழமை மாலை 6 மணிக்கு பெரம்பலூர் புத்தக கண்காட்சியில் உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறன்

பிரண்ட்லைன் இதழில்

எனது சிறுகதை பிழைதிருத்துபவனின் மனைவி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இம்மாத பிரண்ட்லைன் இதழில்  வெளியாகியுள்ளது. திலீப்குமார் தொகுத்த The Tamil Short Story: Through the Times, Through the Tides (Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy) தொகுப்பிலிருந்து இக்கதை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது Translation of the Tamil short story Pizhai Thirutthubavanin Manaivi by S. Ramakrishnan. https://www.frontline.in/arts-and-culture/literature/the-proofreaders-wife/article9473926.ece?homepage=true நன்றி  : விஜயசங்கர் பிரண்ட்லைன் திலீப்குமார்