டால்ஸ்டாய்
டால்ஸ்டாய் குறித்த இந்த மௌனப்படத்தில் அபூர்வமான தருணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டால்ஸ்டாயின் இறுதிஊர்வலத்தைக் காணும் போது நெகிழ்ச்சியாக உள்ளது. https://youtu.be/oxHr1ku9DGI LEO TOLSTOY on Film
டால்ஸ்டாய் குறித்த இந்த மௌனப்படத்தில் அபூர்வமான தருணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டால்ஸ்டாயின் இறுதிஊர்வலத்தைக் காணும் போது நெகிழ்ச்சியாக உள்ளது. https://youtu.be/oxHr1ku9DGI LEO TOLSTOY on Film
11.10.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு
அ.ரெங்கசாமி மலேசியாவின் மிக முக்கிய எழுத்தாளர். நேதாஜியின் விடுதலைப்போரை முன்வைத்து இமயத்தியாகம் என்ற நாவலையும், ஜப்பானியர்கள் மரண ரயில்வே அமைக்கத் தமிழர்களைக் கொண்டு சென்ற அவலக் கதையை “நினைவுச் சின்னம்” என்னும் நாவலாகவும் எழுதியிருக்கிறார் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கும் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சிக்குமான உள்நாட்டுப்போரில் சிக்கி தவித்த மலேயத் தமிழர்கள் கதையை “லங்காட் நதிக்கரை” என்னும் நாவலாக எழுதியிருக்கிறார். வரலாற்றுபிரக்ஞையும் கலைமேதமையும் கொண்ட அவரது படைப்புகள் மிக முக்கியமானவை. அவருக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. அ. ரெங்கசாமி அவர்களுக்கு …
கடந்த நான்கு நாட்களாக ஊட்டியிலிருந்தேன், எங்குத் திரும்பினாலும் ஒரே கூட்டம், நெரிசல், வாகன ஒசை. சென்னை ரங்கநாதன் தெருவிற்குள் இருப்பது போலவே உணர்ந்தேன். ஊட்டியின் பரபரப்பிலிருந்து தப்பி அவலாஞ்சிக்குள் போய்விட்டேன், இருபுறமும் சைப்ரஸ் மரங்கள். கண்படும் இடமெல்லாம் பசுமை, நீரோடைகள்.பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூத்திருந்தது. அப்பர் பவானி வரை சென்று வந்தேன். வழியெங்கும் மிக அரிய, விதவிதமான மரங்கள். மஞ்சளும் நீலமுமாகப் பூத்துச் சொரியும் செடிகள், பவானி ஆலயத்தின் அருகே விழுந்து கொண்டிருக்கும் …
தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்ட வானவன் மாதேவி, வல்லபி இருவரும் ஆதவ் அறக்கட்டளை என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். உயிருககுப் போராடிய நிலையிலும் இவர்கள் மேற்கொண்டு வரும் சேவை மகத்தானது. தன்னைப் போலவே தசைச்சிதைவு நோயால் போராடும் பலருக்கும் மருத்துவ உதவி அளித்து வருகிறார்கள் அந்தப்பணிக்கு நிறைய பொருளுதவி தேவைப்படுகிறது. விருப்பமுள்ள நண்பர்கள் உதவி செய்யும்படியாக கேட்டுக் கொள்கிறேன் •• அன்பு நண்பர்களுக்கு, வணக்கம், என் பெயர் வானவன் மாதேவி. எனது தங்கை பெயர் இயல் இசை வல்லபி. நானும் …
துலாபாரம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இன்றெல்லாம் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். தேவராஜன் மாஸ்டர் இசையில் ஜேசுதாஸின் குரல் மனதை என்னவோ செய்கிறது ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது, யாரிடத்தில் கேள்வி கேட்பது ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம், இறைவனுக்கு வேஷமென்னவோ? ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான் மேடை அவன் மேடையல்லவோ வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ பாடலின் வரிகள் மனதை மேலும் …
திரைக்கதை எழுதலாம் வாங்க என்ற ராஜேஷ் எழுதிய நூலை வாசித்தேன். இதன் சில கட்டுரைகளை தினகரன் வெள்ளிமலர் இணைப்பிதழில் முன்னதாக வாசித்திருக்கிறேன். புத்தகமாக வாசிக்கையில் திரைக்கதை குறித்துத் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான புத்தகமிது என்று உணர்ந்தேன்.வாழ்த்துகள் ராஜேஷ். ஸிட் பீல்டினை முன்வைத்து தமிழ்சினிமாவின் முக்கியக் கூறுகளை அழகாக விவரித்திருக்கிறீர்கள் ‘கருந்தேள்’ ராஜேஷ் எழுதும் சினிமா விமர்சனங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவன் நான். சினிமா குறித்து ஆழ்ந்து அறிந்தவர் ராஜேஷ். தனது வலைத்தளத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து …
Desert flower என்ற ஜெர்மன் திரைப்படத்தை இன்று பார்த்தேன், Waris Dirie என்ற உலகப்புகழ்பெற்ற விளம்பர மாடலின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கியிருக்கிறார்கள். வாரிஸ் சோமாலியாவைச் சேர்ந்தவர், படத்தின் துவக்கத்தில் ஆடு மேய்க்கிற ஒரு சிறுமியாக அறிமுகமாகிறார் வாரிஸ். ஆட்டுக் குட்டியை தோளில் சுமந்தபடியே அவர் பரந்த நிலப்பரப்பை கடந்து போகும் முதற்காட்சியிலே படம் நம்மை உள் இழுத்துவிடுகிறது. ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் குரூர சடங்கான பெண்உறுப்பின் கந்து முனையை வெட்டி அகற்றி விடும் கொடுமைக்கு வாரீஸ் உள்ளாகிறார். …
புகழ் பெற்ற கலை இலக்கிய இதழான Journal of Arts and Ideas யின் பழைய இதழ்கள் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன. https://dsal.uchicago.edu/books/artsandideas/ 1983ம் ஆண்டு Journal of Arts and Ideas வெளியிட்ட மார்க்வெஸ் சிறப்பிதழ் அற்புதமானது. அதில் Writers’ Kitchen: An Interview with Marquez என்ற விரிவான நேர்காணல் உள்ளது. அது தான் நான் வாசித்த மார்க்வெஸின் முதல்நேர்காணல். முக்கியமான நேர்காணல்களில் இதுவும் ஒன்று. https://dsal.uchicago.edu/books/artsandideas/toc.html?issue=2
எனது யாமம் நாவலை பிரெஞ்சில் வெளியிடுவதற்கு அங்குள்ள மிக முக்கிய பதிப்பகம் ஒன்று உரிமை கேட்டுள்ளது. பத்து இந்திய எழுத்தாளர்களின் நாவல்கள் பிரெஞ்சில் வெளிவர உள்ளன, அதில் ஒன்றாக யாமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்குள் அதன் மொழியாக்க பணிகள் நடைபெற்று 2015 இறுதியில் பிரெஞ்சில் வெளியாகயுள்ளது •••