உயிர் பெறும் ஒவியம்
அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் வான்கோவின் ஒவியம் ஒன்றினைப் பார்வையிடும் ஒருவன் அந்த ஒவியத்திற்குள் சென்று அதே நிலக்காட்சிகளை நேரில் காண்பதுடன் வான்கோவைச் சந்தித்துப் பேசுவான். அக்காட்சியில் ஒவியன் வான்கோவாக நடித்திருப்பவர் இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸசி. வான்கோவின் ஒவியம் உயிர்பெற்றுக் காட்சியாக விரியும் அற்புதத்தைத் திரையில் கண்ட போது சிலிர்ப்பாகயிருந்தது. அதே அனுபவத்தை ஒரு முழுத் திரைப்படமாகத் தந்தால் எப்படியிருக்கும் என்பதன் உதாரணமே சமீபத்தில் வெளியாகியுள்ள The Mill and the Cross. நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஒவியரான …