சிந்துசமவெளிக் குறியீடுகள்
தமிழ் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இன்று ரோஜா முத்தையா நூலகத்தில் Dravidian Proof Of the Indus script via Rig Veda என்ற அற்புதமான ஆய்வுரையை வழங்கினார். இந்த நிகழ்விற்கு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமையேற்றிருந்தார். சிந்து சமவெளி ஆய்வில் இது ஒரு மைல்கல் என்றே சொல்வேன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐராவதம் மகாதேவன் தொடர்ந்து சிந்துசமவெளி குறித்த தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆய்வு முடிவுகள் தமிழின் தொன்மை குறித்து புதிய வெளிச்சத்தை காட்டுகின்றன, …