காற்றடித்த யானை.

உருவகக்கதைகள் தமிழில் குறைவாகவே எழுதப்பட்டுள்ளன. உலக இலக்கியத்தில் இவை தனி வகைமையாகக் கருதப்படுகின்றன, குறுங்கதைகளை எழுதியவர்களில் மிரோஜெக், ஹென்ரிச் ப்யூல். யாசுனாரி கவாபதா, போர்ஹே, பார்த்தல்மே போன்றோர் முக்கியமானவர்கள். உருவக்கதைகளில் முக்கியமான படைப்பாக ஸ்லவொமிர் மிரோஜெக்கின் யானை கருதப்படுகிறது. இக்கதை தமிழில் நடை இதழில் வெளியாகி உள்ளது. ஸ்லவொமிர் மிரோஜெக். போலந்தின் முக்கியமான நாடக ஆசிரியர். அவரது நடுக்கடலில் (Out at Sea)என்ற நாடகம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு நாடகவெளி இதழில் வெளியாகியிருக்கிறது. மிரோஜெக்கின் இரண்டு குறுங்கதைகளைப் …

காற்றடித்த யானை. Read More »

ஒவியங்களும் புகைப்படங்களும்

இளம்புகைப்படக்கலைஞர்களுக்காக உலகப்புகழ்பெற்ற ஒவியங்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த உரை ஒன்றினை சனிக்கிழமை (26/07/2014) காலை கே.கே.நகரில் உள்ள சாதனா நாலெட்ஜ் பார்க்கில் நிகழ்த்தினேன். இந்த நிகழ்விற்காகத் தமிழகம் முழுவதுமிருந்து 30 புகைப்படக்கலைஞர்கள் வந்திருந்தார்கள். எனது நண்பர்கள் புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ், விகடன் பொன்காசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக நண்பர் ஞாநி வருகை தந்தார். மும்பையில் வசிக்கும் புகைப்படக்கலைஞரான ஜெய்சிங் தனது நண்பர்களுடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்த …

ஒவியங்களும் புகைப்படங்களும் Read More »

மௌனியோடு ஒரு மாலை

நேற்று  மௌனி குறித்து எழுத்தாளர் கி. அ. சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை கேட்பதற்காகப் போயிருந்தேன். அழகியசிங்கர் கோவிந்தராஜன் இருவரும் இணைந்து விருட்சம் சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் கேட்க பதினைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் சரிபாதி எழுத்தாளர்கள். எழுத்தாளர் இரா.முருகன். திரைப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ராஜ்கமல் கண்ணன், சிறகு ரவிச்சந்திரன், ராஜகோபால் முதலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மௌனியின் மகள் ஞானம், தனது கணவருடன்  கூட்டத்தில் கலந்து கொண்டார், நிகழ்வின் இறுதியில் ஞானம் தன் தந்தையைப் …

மௌனியோடு ஒரு மாலை Read More »

சாமுராயும் கதை சொல்லியும்

நெடுங்காலத்தின் முன்பு நாடோடியாகச் சுற்றிக் கதை சொல்வதில் தேர்ந்த கதை சொல்லி ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள்   தனது பயண வழியில் மிகுந்த பசியை அடைந்தார். சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அருகில் சாமுராய்களுக்கான பயிற்சிக்கூடம் ஒன்றிருப்பதை அறிந்து அங்கே சென்றார். சாமுராய்களின் பயிற்சிக்கூடத்தில் உணவும், தங்குமிடமும் வேண்டுமென்றால் அங்கேயுள்ள யாராவது ஒருவருடன் சண்டை போட வேண்டும் என்பது விதி கதைசொல்லி அந்தப் பயிற்சிக்கூடத்திற்குள் போய்த் தான் சண்டை போட வந்துள்ளதாகக் கூறினார் யாருடன் சண்டை போடப்போகிறீர்கள் …

சாமுராயும் கதை சொல்லியும் Read More »

இந்தியாவிற்கு இடமில்லை

உலகக் கால்பந்து போட்டிகள் ஏற்படுத்திய உற்சாகத்தில்  ஒரு இணையவிளம்பரம் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.தேடிப்படிக்க வேண்டிய பட்டியலிது. ஒரே வருத்தம் இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரு நாவல் கூட இடம்பெறவில்லை. 1.            BRAZIL                                  BUDAPEST – CHICO BUARQUE 2.            CHILE                                    BY NIGHT IN CHILE – ROBERTO BOLANO 3.            COLUMBIA                         MEMORIES OF MELANCHOLY WHORES – GABRIEL GARCÍA MÁRQUEZ 4.            JAPAN                                  1Q84 – HARUKI MURAKAMI 5.            ITALY   …

இந்தியாவிற்கு இடமில்லை Read More »

வால் ஆட்டாத நாய்

பஞ்ச கல்யாணி என்றொரு படம் 1979ல் வெளியாகி வசூலை அள்ளி குவித்தது. படம் ஒடிய நாட்களில் அதில் நடித்த கழுதையைத் தியேட்டர் தியேட்டராக அழைத்துக் கொண்டு போய்க் காட்டிக் கொண்டாடினார்கள்.அக்கழுதையைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம், தள்ளுமுள்ளு. நிறையப் பேர் அதனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.அதன்பிறகு அக்கழுதை வேறு திரைப்படங்களில் நடிக்கவுமில்லை, யாரும் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. என்ன ஆகியிருக்கும் அதன் வாழ்க்கை. ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆடு தன் நட்சத்திர அந்தஸ்தை என்ன செய்திருக்கும். அந்த ஆடு …

வால் ஆட்டாத நாய் Read More »

எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள்

சிறப்பு மிக்க எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களைத் திரையிடும் நிகழ்வினை சாகித்ய அகாதமி  ஏற்பாடு செய்துள்ளது வருகின்ற ஜுலை 27  ஞாயிறு காலை முதல் மாலை வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது இந்தத் திரையிடலில் ஜெயகாந்தன். சுனில் கங்கோபாத்தியாய, மஹா சுவேதாதேவி, வைக்கம் முகமது பஷீர். கமலா தாஸ், இந்திரா பார்த்தசாரதி ஆகிய ஆறு முக்கிய எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் இடம்பெறுகின்றன. நிகழ்விற்கு கே.சீனிவாச ராவ் வரவேற்புரை வழங்குகிறார். கி.நாச்சிமுத்து தலைமை …

எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் Read More »

பாஷோவின் பயணங்கள்

பாஷோ மகத்தான ஹைக்கூ கவிஞர்.  பாஷோ என்றால் ஜப்பானிய மொழியில் வாழை மரம் என்று அர்த்தம்.  All who achieve greatness in art possess one thing in common: they are one with nature எனப் பாஷோ குறிப்பிடுகிறார். இவரது ஐந்து பயணங்களின் தொகுப்பு நூலாகிய Basho’s Journey வாசித்துக் கொண்டிருந்தேன் 1684ம் ஆண்டுத் தனது சீடனுடன் ஈடோவில் இருந்து நீண்ட பயணத்தைத் துவக்கினார் பாஷோ. Uenoவில் உள்ள தனது பிறந்த வீட்டை …

பாஷோவின் பயணங்கள் Read More »

ஒவியத்தில் மலர்கள் உதிர்வதில்லை

ஜோர்ஜியா ஒ கீஃப் ( Georgia O’Keeffe ) என்ற அமெரிக்கப் பெண் ஒவியரைப்பற்றிய திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். நேர்த்தியான உருவாக்கம் கொண்ட திரைப்படம். தொலைக்காட்சிக்காக எடுக்கபட்டிருக்கிறது. Joan Allen ஜோர்ஜியாவாக நடித்திருக்கிறார், ஆல்பிரட்டாக நடித்தவர் ஜேரோமி அயர்ன்ஸ். ஜோர்ஜியாவின் New York with Moon எனது விருப்பமான ஒவியங்களில் ஒன்று. ஒவியரின் வாழ்வை விவரிப்பதால் காட்சிகள் ஒவியத்துல்லியத்துடன் தனித்துவமான கோணங்களில் வண்ணங்களில் படமாக்கபட்டுள்ளன, தேர்ந்த நடிப்பும், சிறந்த இசையும் படத்தொகுப்பும், கலைஇயக்கமும் ஒன்று சேர்ந்து கலைநேர்த்தியான …

ஒவியத்தில் மலர்கள் உதிர்வதில்லை Read More »

நூறு பொருள்களில் உலக வரலாறு

மனிதகுல வரலாறு குறித்துத் தோழர் எஸ்ஏ பெருமாள் வகுப்பு எடுப்பதில் விற்பன்னர், அவரது உரையில் கற்காலம் துவங்கி இன்றைய இணையம் வரையான மனிதகுல வளர்ச்சி மற்றும் அறிவியலின் வரலாறு. தொழில்நுட்பம் உருவானவிதம், கண்டுபிடிப்புகளின் வரலாறு எனச் சுவைபடக் கூறுவார், முதன்முதலாக ஜார்ஜ் தாம்சனின் மனிதகுல சாரம் நூலைப்பற்றி அவரது உரையில் தான் அறிந்து கொண்டேன். ஜார்ஜ் தாம்சன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மார்க்சிய ஆய்வாளர், கிரேக்க மொழியில் தேர்ந்தவர், பண்டை கிரேக்க சமூக உருவாக்கம் குறித்துத் …

நூறு பொருள்களில் உலக வரலாறு Read More »