நிமித்தம் டீசர்
எனது புதிய நாவலான நிமித்தம் குறித்து உருவாக்கபட்ட டீசர் ஒன்று யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது •• S.RAMAKRISHNAN ‘S NIMITTAM https://youtu.be/tUGi1YLdqKo
எனது புதிய நாவலான நிமித்தம் குறித்து உருவாக்கபட்ட டீசர் ஒன்று யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது •• S.RAMAKRISHNAN ‘S NIMITTAM https://youtu.be/tUGi1YLdqKo
உயிர்மை வெளியிட உள்ள புதிய நாவலான நிமித்தம் ஜனவரி 5ம் தேதி ஞாயிறு மாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் வெளியிடப்பட உள்ளது
இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்காக உயிர்மை வெளியிட உள்ள புதிய வெளியீடுகள், வெளியீட்டு விழா பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்
இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்காக உயிர்மை வெளியிட உள்ள எனது புத்தகங்கள் வெளியீட்டு விழா பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன் **
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் பயிலும் மாணவர் மதி எனது சிறுகதை இரண்டு குமிழ்களை குறும்படமாக இயக்கியுள்ளார், இரு குமிழ்கள் என்ற அக்குறும்படம் 11 நிமிஷம் ஒடக்கூடியது இப்படம் தற்போது கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற உலகத்திரைப்படவிழாவில் நவம்பர் 29ம் தேதி காலை திரையிடப்பட உள்ளது. **
உயிர்மை பதிப்பகம் வெளியிடும் எனது புதிய நாவல் நிமித்தம் ஜனவரியில் வெளியாகிறது. இதன் வெளியீட்டுவிழா ஜனவரி 2014 முதல்வாரம் நடைபெறும் நிமித்தம் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி (1) காரணம் (2) நிமித்தம் (3) சகுனம் (4) அடையாளம் (5)பொருட்டு என்ற ஐந்து பொருட்களைச் சுட்டுகின்றது (Tamil Lexicon; Vol.IV.part1p.2254) •••
இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் புதிய திரைப்படமான தலைமுறைகள் விரைவில் வெளியாக உள்ளது, படத்தைப் பாலுமகேந்திரா அவர்களுடன் இணைந்து தயாரித்திருப்பவர் இயக்குனர் சசிகுமார், பாலுமகேந்திரா அவர்களின் சிறப்பு அழைப்பின் காரணமாக இன்று காலை அப்படத்தினை தனித்திரையிடலில் பார்த்தேன், தமிழ் மீதும். தமிழ் மக்கள் மீதும் பாலுமகேந்திரா அவர்கள் கொண்டுள்ள ஒப்பற்ற அன்பின் வெளிப்பாடே இப்படம். நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இதுவென்பேன், தமிழ்ச்சினிமா உலகிற்கு இப்படம் அவரது கொடை, இந்திய சினிமா நூற்றாண்டிற்குத் …
அந்திமழை இதழில் வெளியான எனது புதிய சிறுகதை, **** காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருந்தாள், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம் அவள் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாகவே நுழைந்திருந்தது. இவ்வளவு அடர்த்தியான வாசனை திரவியத்தைப் பூசிக் கொள்கிற ஒரே பெண் அவளாகத் தானிருக்ககூடும் ஷெர்லி பிராங் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள் என்றால் அன்று ஏழாம் தேதி என்று அர்த்தம், ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அன்று மாலை நான்கு …
குழந்தைகளுக்காக நான் எழுதிய சிரிக்கும் வகுப்பறை என்ற நாவல் குறித்து புதிய தலைமுறை இதழில் பத்திரிக்கையாளர் கருணாகரன் சிறப்பானதொரு அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார், இந்த நூலை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சத்யஜித் ரே குழந்தைகளுக்காக எழுதிய பெலுடா கதைவரிசைகளின் வெளியீட்டு விழா வருகின்ற நவம்பர் 11 மாலை ஆறுமணிக்கு சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் ஹாலில் நடைபெற உள்ளது, பாரதி புத்தகாலயம் இந்த விழாவினை ஏற்பாடு செய்துள்ளது அந்த விழாவில் கலந்து கொண்டு பெலுடா கதைகள் பற்றி பேச இருக்கிறேன் ••• புதிய புத்தகங்கள் சென்னையில் நான் நிகழ்த்திய ஏழு உலக இலக்கியப்பேருரைகள் புத்தக வடிவம் பெறுகின்றன, எனது உரையுடன் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் …