நிமித்தம் வெளியீட்டுவிழா
நண்பர்களே வருகின்ற ஞாயிறு மாலை ஆறுமணிக்கு (05.01.2014 ) சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எனது நாவல் நிமித்தம் வெளியிடப்பட இருக்கிறது, இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••
நண்பர்களே வருகின்ற ஞாயிறு மாலை ஆறுமணிக்கு (05.01.2014 ) சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எனது நாவல் நிமித்தம் வெளியிடப்பட இருக்கிறது, இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••
முழு மகாபாரதத்தையும் நாவல் வடிவில் தொடர்ச்சியாகப் பத்து நூல்களாக வெளியிடும் மகத்தான முயற்சியில் நண்பர் ஜெயமோகன் இறங்கியிருக்கிறார், வெண்முரசு என்பது இதன் தலைப்பு, அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாக உள்ளது இது ஒரு பெரும்கனவு, அவரால் முடியும் என்றே தோன்றுகிறது, ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எனப் பத்துவருடங்கள் தொடர்ச்சியாக அவர் மேற்கொள்ளப் போகும் எழுத்துசாதனைக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இந்திய மொழிகளில் இது போன்ற …
டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன் ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குனர், ஜெயகாந்தனின் நெருக்கமான தோழர், நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர், உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர், அவரது அனுபவச்சுவடுகள் என்ற நூலை சமீபமாக வாசித்தேன், கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கேஎஸ்ஸின் பள்ளி வாழ்க்கை துவங்கி பிலிப்பைன்ஸில் அவர் பணியாற்றிய காலம், அவரது நண்பர்கள், சந்திப்புகள், நினைவில் நிற்கும் ஆளுமைகள் எனப் பல்வேறு நிகழ்வுகளின் நினைவுத்தொகுப்பே இந்த நூல், இதன் தனிச்சிறப்பு தனது நினைவுகளை மட்டும் …
புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னை வானொலி அலைவரிசை ஒன்றில் காட்சியாகும் கதை என்ற தலைப்பில் தமிழ் இலக்கியமும் தமிழ்சினிமாவும் பற்றி ஒரு மணி நேர உரை நிகழ்த்தியிருக்கிறேன், இது டிசம்பர் 31 இரவு பத்துமணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகும், இந்த நிகழ்ச்சி மதுரை கோவை திருச்சி நெல்லை உள்ளிட்ட எல்லா வானொலிகளிலும் ஒலிபரப்புச் செய்யப்படும் இதன் இரண்டாவது பகுதி புத்தாண்டு தினத்தன்று காலை பத்து மணி முதல் பதினோறு மணி வரை சென்னை வானொலி அலைவரிசை …
நான் வெயில்காலத்தில் பிறந்தவன், வெயிலேறிய கிராமத்தில் வளர்ந்தவன், ஆகவே ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலமும் எனக்கு ஒவ்வாதவை, அதைக் கடந்து செல்வதற்காக நிறைய முன்தயாரிப்புகள், பிரயாசைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது குறிப்பாகக் குளிர் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை, பின்னிரவுகளில் விழித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு எப்போது சூரியன் உதயமாகும் எனக் கதகதப்பிற்குக் காத்துக் கொண்டிருப்பது விநோதமான அனுபவம், இந்தக் குளிர்காலமும் அப்படித்தான் துவங்கியிருக்கிறது, இரண்டு முறை மருத்துவரிடம் சென்று குளிர்காய்ச்சலுக்கான மருந்துகளைப் பெற்றுவந்துவிட்டேன், காய்ச்சல் குறைந்துவிட்டது ஆனால் மனநிலை பிடிப்பற்று …
– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர், அவரது ஊர்பெயரியல் ஆய்வு குறித்த அறிமுக கட்டுரை ••• மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக …
வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது, இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க …
நேற்று சென்னை திரைப்பட விழாவில் An American in Madras, ஆவணப்படத்தினைப் பார்த்தேன், எல்லீஸ் ஆர் டங்கனை பற்றிய ஆவணப்படமிது. மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது, பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற கரண்பாலி இயக்கியுள்ளார் , ஆர் வி ரமணி படத்தின் ஒளிப்பதிவாளர், 80 நிமிசங்கள் ஒடக்கூடிய இப்படம் டங்கனை பற்றிய முழுமையாகச் சித்திரத்தை நமக்குத் தருகிறது, சதி லீலாவதி, பொன்முடி, அம்பிகாபதி, சகுந்தலா, மீரா, மந்திரிகுமாரி உள்ளிட்ட பதிமூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எல்லீஸ் ஆர் டங்கன், எம்ஜிஆரை தமிழ் சினிமா …
வேல்முருகன் என்ற இளம்வாசகர் தனது முகநூலில் பதிந்துள்ள விமர்சனக்குறிப்பு ••• எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, தஸ்தாயெவ்ஸ்கியின், “ குற்றமும் தண்டனையும்” நூலை பற்றி, உலக இலக்கியப் பேருரைகள்.. என்ற தலைப்பில் பேசிய பேச்சு சில இணைப்பு கட்டுரைகளுடன் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. நேற்று மாலை விருதுநகரில் நலம் ஹோமியோ மருத்துவமனை சென்றேன் அங்கு நோயாளிகள் காத்து இருக்கும் நேரம் பயனுள்ளதாக இருக்கும் விதத்தில் நல்ல நூல்கள் படிக்க வைக்கபட்டு இருக்கும், அப்படி நான் காத்துயிருக்கும் நேரத்தில் படித்த நூல்தான் …