வெற்றிகரமான விழா
நேற்று திருச்சியில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பிய கூட்டம், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இடம் கிடைக்காமல் நிகழ்ச்சி முழுவதும் நின்று கொண்டே கேட்டனர், வெளீயீட்டு விழாவிற்கெனக் கொண்டுவந்த புத்தகங்கள் ஒட்டுமொத்தமாக விற்று தீர்ந்து போனதோடு பலரும் பணம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வரிசையில் நின்றதும் நடந்தேறியது இப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான பார்வையாளர்களை என் வாழ்வில் நான் கண்டதேயில்லை, புத்தகங்களை வெளியீட்டு பேசிய தேவதச்சன் அருமையான துவக்கத்தை ஏற்படுத்தினார், அறிமுகவுரையை …