பாராட்டிற்குரியவர்கள்

கடந்த ஒரு வாரத்தின் முன்பாக மதுரையில் நடைபெற்ற விருட்சத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது குறித்து நண்பர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தார்கள், நானும் அதில் கலந்து கொள்ள விரும்பியிருந்தேன், ஆனால் வேறு ஒரு முக்கியப்பணியின் காரணமாக சேலம் சென்ற காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்த விருட்சத்திருவிழா  களமாக அமைந்திருந்தது என்று பல பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், இதனை சாத்தியமாக்கிய நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கும் அவரது குழுவிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்த இந்த …

பாராட்டிற்குரியவர்கள் Read More »

நாடகப் புத்தகங்கள்

மதுரையில்  இன்று (31.08.2013 ) நடைபெறுவதாக இருந்த எனது இரண்டு நாடகப் புத்தகஙகளின் வெளியீட்டு விழா  தள்ளிவைக்கபட்டுவிட்டது இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கயல்கவின் பதிப்பகம் முறையான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் போனதால் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இரண்டு நாடகப்புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறும் இடம், நாள் பின்னர் அறிவிக்கபடும். ••••

எழுத்துலகின் சாமுராய்

இரண்டாம் உலகயுத்தம் ஜப்பானுக்கு ஏற்படுத்திய அடி மிகவும் வலிமையானது, அதன் பாதிப்பில் இருந்து இன்றும் அவர்களால் முழுமையாக விடுபடமுடியவில்லை, ஜப்பானிய இலக்கியத்திலும் யுத்தகாலத்திற்குப் பிந்தைய எழுத்தில் நிறைய மாற்றங்கள் உருவாகின, குறிப்பாக மிஷிமாவும் கவாபதாவும் கோபே அபேயும், புமிகோவும் முக்கிய நவீன எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள், இவர்களில் யாசுனாரி கவாபதா நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, யுகியோ மிஷிமா (Yukio Mishima) இரண்டு முறை நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டவர், அரசியல் நிலைப்பாடு காரணமாகவே அவருக்கு …

எழுத்துலகின் சாமுராய் Read More »

அழைப்பிதழ்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ள எனது நாடகப் புத்தகங்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

ஒண்டிக்கட்டை

சிறுகதை. மாக்ஸிம் கார்க்கி தமிழில் பாஸ்கரன் எனக்கு பிடித்தமான மாக்சிம் கார்க்கியின் கதையிது, ருஷ்யச் சிறுகதைகள் நூலில் இருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது ••• ஏழைகளைப்  புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். நரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு …

ஒண்டிக்கட்டை Read More »

மொசில்லா தமிழ் உலாவி

மொசில்லா பயர்பாக்ஸ்  உலாவி முழுமையாகத் தமிழில் உருவாக்கபட்டுள்ளது இதனை தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, ஆர்வம் மிக்க இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சாதித்துக் காட்டி அரிய சாதனை செய்துள்ளது, புதிய தமிழ் மொசில்லா பயர்பாக்ஸ் உலாவியின் வெளியீட்டுவிழா  ஆகஸ்ட் 20, செவ்வாய்கிழமை, மாலை ஆறுமணிக்கு மைலாப்பூர் சிவகாசி பெத்தாச்சி அரங்கில் நடைபெற உள்ளது, அதில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொள்கிறேன் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

டபுலிஸ்தான்

Vive la France  என்ற பிரெஞ்சு படத்தை நேற்றிரவு பார்த்தேன்,  மிகச்சிறந்த நகைச்சுவைபடமிது, Taboulistan என்றொரு கற்பனையான நாடு, உலக நாடுகள் யாரும் தன்னைக் கண்டுகொள்ளவேயில்லை, தங்களின் பாராம்பரிய Tabbouleh  உணவு  பற்றி ஒருவரும் அறிந்திரு க்கவில்லை, அதை லெபனான் உணவு என தவறாக கூறுகிறார்கள்  என அந்த நாட்டு சர்வாதிகாரிக்குப் பெரிய ஆதங்கம், அதனால்  உலகின் கவனத்தை ஈர்க்க commercial terrorism என்ற முறையைக் கையாள முடிவு செய்கிறார் அதாவது ஒரு தற்கொலைப் படையை அனுப்பி …

டபுலிஸ்தான் Read More »

க்யூகோவின் மகள்

காதலுக்காகத் தன்னை அழித்துக் கொண்ட தேவதாஸைத் தான் நமக்குத் தெரியும், தான் காதலித்தவனை அடைவதற்காக தன் அழகினைச் சிதைத்துக் கொண்டு, காதலன் செல்லும் ஊர் ஊராக மறைந்திருந்து பின்தொடர்ந்து, அவமானங்களுக்கு உள்ளாகி காதலில் தோற்றுப்போய், மனச்சிதைவு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும்  மனநலக்காப்பாகத்தில் வாழ்ந்து மடிந்த அடேலைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, அடேல், பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் க்யூகோவின் மகள், இவளின் காதல் துயரம் க்யூகோவின் எல்லா புனைவுகளையும் விட விசித்திரமானது, அடேலின் காதலைப்பற்றி …

க்யூகோவின் மகள் Read More »

வாழ்வின் சில உன்னதங்கள்

பழைய புத்தகக் கடைகளுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே பழைய புத்தகக் கடை இருக்கிறதா எனத் தேடுவது எனது வழக்கம், அப்படித் தேடி நிறையப் பொக்கிஷங்களை வாங்கியிருக்கிறேன், பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை  சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், …

வாழ்வின் சில உன்னதங்கள் Read More »

வாழ்த்துகள்

தமிழ் பேராய விருது பெற்றுள்ள தமிழ் இலக்கிய ஆளுமை கோவை ஞானி, நண்பர்கள் ஜெயமோகன், அ.முத்துலிங்கம், முனைவர் சுசிலா ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஜெயமோகனின் அறம் சமகாலத்தில் வெளியான மிகமுக்கியமான சிறுகதைத் தொகுதி, அதற்கு இவ்விருது கிடைத்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. சிறந்த அயலக எழுத்தாளருக்கான விருது அ.முத்துலிங்கத்திற்கு கிடைத்திருப்பது மிகத்தகுதியான ஒன்று, நாம் பெருமையோடு கொண்டாட வேண்டிய முக்கியமான படைப்பாளி அவர். **