புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே
மாலனின் சிறுகதைத் தொகுப்பை மறுபடி படித்துக் கொண்டிருந்தேன், நுட்பமாகவும், தனித்துவமிக்கதாகவும் உள்ள இவரது சிறுகதைகள் மறுவாசிப்பில் மிகவும் நெருக்கமாக இருந்தன, மாலனின் கதைகளில் வரும் மனிதர்கள் பெரும்பகுதி நடுத்தர வர்க்கம், அவர்களின் அக,புற பிரச்சனைகளும் அது உருவாகி வெளிப்படும் விதமும் விசித்திரமாக இருக்கின்றன, அசோகமித்ரன் காட்டிய மத்தியதர உலகம் ஒரு பக்கம், ஆதவன் காட்டிய உலகம் இன்னொரு பக்கம் என்றால் இரண்டின் சாயலுமின்றி நடுத்தர வர்க்க உலகின் திண்டாட்டங்களை, சின்னஞசிறு சந்தோஷங்களை. வெளிப்படுத்த முடியாத துக்கங்களை தனது …