ஆங்கிலத்தில்

எனது சிறுகதை இயல்பு பாண்டிச்சேரியை சேர்ந்த வெங்கட சுப்பாராய நாயகர் மொழியாக்கத்தில் “Transfire” ஆங்கில இதழில் வெளியாகி உள்ளது “Transfire”  (7th Issue), April-June2013 . ••• கோவை நிர்மலா பெண்கள் கல்லூரி தமிழ் துறையில் எனது சிறுகதை ஒலைக்கிளி இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கபட்டுள்ளது ••• திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் எம்ஏ தமிழ் மாணவர்களுக்கு எனது நாவல் யாமம் பாடமாக வைக்கபட்டுள்ளது ••• ஆசிய நாடுகளின் சிறந்த சிறுகதைகள் 40 அடங்கிய தொகைநூல் ஒன்றினை …

ஆங்கிலத்தில் Read More »

பார்த்தேன் படித்தேன்

ருஷ்டியின் Midnight’s Children நாவலை வாசித்திருக்கிறேன், அது எனக்கு அவ்வளவு ஈர்ப்புடையதாகயில்லை, ஆனால் சில நாட்களுக்கு முன்பாகத் தீபா மேத்தா இயக்கத்தில் அதைப் படமாகப்பார்த்தேன், படம் எனக்குப் பிடித்திருந்தது, மறுபடியும் அந்த நாவலை படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், தீபா மேத்தா நாவலுக்கு மிக நெருக்கமாகப் படமாக்கியிருக்கிறார், ருஷ்டியின் சமீபத்தைய புத்தகமான Joseph Anton அவர் மீது பட்வா விதிக்கபட்ட நாளில் துவங்கி அவர் தப்பியோடிய நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது, மரணம் துரத்தும் ஒரு எழுத்தாளனின் …

பார்த்தேன் படித்தேன் Read More »

திருப்பூரில்

வருகின்ற 30ம் தேதி திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நடத்தும் பிடல்காஸ்ட்ரோ பேருரைகள் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன். நடைபெறும் இடம் : கருப்பராயன் கோவில் மண்டபம், குமார்நகர், திருப்பூர். நேரம் : மாலை 6 மணி நாள்: 30.06.2013, ஞாயிறு

மலையாள இதழில்

எனது சிறுகதை குதிரைகள் பேச மறுக்கின்றன Santham Malayalam  monthly June 2013 இதழில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் ஷாபி செருமாவிலாயி.

ஹெமிங்வேயின் காளைச்சண்டை

‘’காளைச்சண்டை என்பது ஒரு விளையாட்டல்ல, அது ஒரு மூன்று அங்கங்கள் உள்ள துன்பவியல் நாடகம். அதை ஒரு நடனத்தைப் பார்ப்பது போலத் தான் நாம் ரசிக்கவேண்டும். சாவை மிகுந்த நெருக்கத்தில் சந்தித்து அதன் முகத்தை ஆராய்வது தான் காளைச்சண்டை என்று கூடச் சொல்லலாம். உண்மையில் காளைச்சண்டையில் காளையை அடக்க வரும் வீரன் ஒரு கணித ஆசிரியர் கரும்பலகையின் முன்னால் நின்று கொண்டு தனது தியரத்தை விளக்கி சொல்வது போலச் சாவின் அறியப்படாத புதிரை கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகிறான். …

ஹெமிங்வேயின் காளைச்சண்டை Read More »

இயக்குனர் மணிவண்ணன்

இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் மறைவு தாங்கமுடியாத இழப்பு, தீவிர இலக்கியங்களை தேடித்தேடி வாசித்த படிப்பாளி அவர், ஈழத் தமிழ் மக்களின் மீது தீவிர அக்கறை கொண்ட உணர்வாளர்,  எப்போது சந்திக்கும் போதும் என்ன படித்தீர்கள் என்று தான் முதலில் கேட்பார், சிற்றிதழ் படைப்பாளிகள் பலருக்கும் அவர் உதவி செய்திருக்கிறார், 1998ல் போர்ஹே பற்றிய புத்தகம் ஒன்றினை பதிப்பிக்க வழியின்றி நானே வெளியிட்டிருந்தேன், விருதுநகரில் இருந்த எனது இல்லமுகவரிக்கு மணிவண்ணன் தொடர்பு கொண்டு அதை தான் வாங்கி படித்து …

இயக்குனர் மணிவண்ணன் Read More »

கி.ராஜநாராயணன் தபால்தலை

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கொண்டாடப்படும், தமிழின் மூத்த படைப்பாளி கி.ராஜநாராயணன் அவர்களின் தபால்தலை வெளியிடும் நிகழ்வு ஜுன் 14 மாலை தி.நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது, இதில் நேசத்திற்குரிய தோழர், ஆர்.நல்லகண்ணு,  அவர்கள் கி.ராஜநாராயணன் தபால் தலையை வெளியிட்டார், அதை நான் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருவதாக இருந்தது. கரிசல் எழுத்தாளர்கள் சங்கமம் என்ற இந்த நிகழ்வில் கி.ராஜநாராயணனின் இலக்கியப் பங்களிப்பு குறித்து உரை நிகழ்த்தினேன், தமிழின் முன்னோடி படைப்பாளிக்கு கிடைத்த இக்கௌரவம் எழுத்தாளர்கள் அனைவரும் …

கி.ராஜநாராயணன் தபால்தலை Read More »

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் வருகின்ற 17ம் தேதி திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு தமிழ் இலக்கியமும் அயல் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளேன், இந்த அமர்வில் எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் ஷாஜகான் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள்.

மனசாட்சியின் குரல்

தீராநதி ஜூன் 2013 இதழில் வெளியாகி உள்ள எனது சிறுகதை கடக்கமுடியாத பாலம் குறித்து தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்  எழுதியுள்ள பதிவிது. *** எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நம்  மனசாட்சியை உலுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நம் மனசாட்சியை உலுக்கும் சாதிக்கலவரங்கள் சாகா வரம் பெற்றவை போல நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவை எந்தப் பொறியில் துவங்கிக் கொழுந்து விட்டு எரிந்தன என்பது மட்டுமே ஒவ்வொரு முறையும் வேறுபடலாம். அல்லது பழைய பின்னணி மறுபடியும் இருக்கலாம். ஆனால் துவங்கிய பின் நடக்கும் …

மனசாட்சியின் குரல் Read More »