புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள் எந்த அரங்கில் கிடைக்கின்றன என்பது குறித்தும் இந்த புத்தகக் கண்காட்சியில் என்ன புதிய புத்தகங்கள் வாங்கலாம்  என்றும்  நண்பர்கள்  பலர் தொடர்ந்து  மின்னஞ்சலில் கேட்டு வருகிறார்கள்,அவர்களுக்காக எனது பரிந்துரை,

இது கடந்த நான்கு நாட்களில் புத்தக கண்காட்சியில் சுற்றித் தேர்வு செய்தவை,  இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொள்ளவும்

•••

1) ஒநாய் குலச்சின்னம்  -ஜியாங் ரோங் -தமிழில் சி மோகன், அதிர்வு வெளியீடு, முக்கியமான மொழியாக்க நாவல்

2) வண்ணம் பூசிய பறவை -ஜெர்ஸி கோஸின்ஸ்கி  -புலம் வெளியீடு

3)தேவதச்சன் – புதிய கவிதை தொகுதி – எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது -உயிர்மை பதிப்பகம்

4)ராஜீவ் காந்தி சாலை  -புதிய நாவல் -விநாயக முருகன்- உயிர்மை பதிப்பகம்

5)வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு -ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள்-  தொகுப்பு செங்கதிர். காலச்சுவடு வெளியீடு

6)திருடன் மணியம்பிள்ளை -காலச்சுவடு வெளியீடு
7) பனி -ஒரான் பாமுக் -தமிழில் ஜி குப்புசாமி -காலச்சுவடு வெளியீடு
8) ஆறாம் திணை -டாக்டர் சிவராமன் -விகடன் வெளியீடு
9) தென்னாட்டில் காந்தி- விகடன் வெளியீடு
10)என் சக பயணிகள்- ச தமிழ்செல்வன் -பாரதி புத்தகாலயம்
11) அடிப்படைவாதங்களின் மோதல்- தாரிக் அலி -பாரதி புத்தகாலயம்
12)துப்பாக்கிகள் கிருமிகள் எக்கு  -ஜாரெட் டைமண்ட் -பாரதி புத்தகாலயம்
13) இந்திய நாத்திகம் -தேவிபிரசாத் சட்டோபாத்யாயா-பாரதி புத்தகாலயம்
14) ஸ்டீபன் ஹாக்கிங் – எதிர் வெளியீடு
15) யாருக்காக மணிகள் ஒலிக்கின்றன -ஹெமிங்வே -எதிர் வெளியீடு
16) அப்பாவின் துப்பாக்கி -ஹினெர் சலீம், காலச்சுவடு பதிப்பகம்
17)வெல்லிங்டன் -சுகுமாரன்- புதிய நாவல் காலச்சுவடு
18)கால கண்டம் -எஸ் செந்தில்குமார் -புதிய நாவல் உயிர்மை பதிப்பகம்
19)வெண்கடல் -ஜெயமோகன் -வம்சி பதிப்பகம்
20) திரைப்பட மேதைகள் -எஸ ஆனந்த் -தமிழினி பதிப்பகம்
21)அம்பேத்கரின் வழித்தடத்தில்-  பகவன்தாஸ்- புலம் வெளியீடு
22) பிக்சல் -சிஜே ராஜ்குமார் -டிஸ்கவரி புக் பேலஸ்
23) சிற்றிலக்கியங்கள் -நாஞ்சில் நாடன்- தமிழினி பதிப்பகம்
24) சினிமா என்ற பெயரில்-வெங்கட் சாமிநாதன்- வம்சி பதிப்பகம்
25) சூரியனுக்கு அருகில் ஒரு வீடு- மனுஷ்யபுத்திரன் கவிதைகள் -உயிர்மை
பதிப்பகம்
26)இந்த உண்மைகள் ஏன் மறைக்கபடுகின்றன- ராஜ் சிவா -உயிர்மை பதிப்பகம்
27)நள்ளிரவின் குழந்தைகள்- சல்மான் ருஷ்டி  – எதிர்வெளியீடு
28) மாமன்னன் அசோகன் -சார்லஸ் ஆலன்-  எதிர்வெளியீடு
29) மணி ரத்னம் படைப்புகள் ஒர் உரையாடல் -பரத்வாஜ் ரங்கன்-  கிழக்குபதிப்பகம்
30) நேரு -நயன்தாரா சகல் -கிழக்கு பதிப்பகம்
31) மாகடிகாரம்  -குழந்தைகளுக்கான புனைகதை -விழியன்- பாரதி புத்தகாலயம்
32)ஹாருகி முரகாமி -யானை காணாமலாகிறது- மலைகள் பதிப்பகம்
33)மேதைகளின் குரல்கள் – உலகத்திரைப்பட இயக்குனர்களின் நேர்காணல்கள் -மலைகள் பதிப்பகம்
34) குன்னிமுத்து – நாவல்- குமாரசெல்வா -காலச்சுவடு பதிப்பகம்
35) கவிதையின் கால்தடங்கள்- 50 கவிஞர்களின் 400 கவிதைகள் -தொகுப்பு செல்வராஜ் ஜெகதீசன் அகநாழிகை பதிப்பகம்
36) எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை – நாவல் – சி.மோகன் -நற்றிணை பதிப்பகம்
37)மீன்கள் -தெளிவத்தை ஜோசப்  தொகுப்பாசிரியர்: ஜெயமோகன் -நற்றிணை பதிப்பகம்
38) நினைவுப் பாதை- நகுலன்-நற்றிணை பதிப்பகம்
39) படைப்பாளிகள் உலகம் -அசோகமித்திரன்-நற்றிணை பதிப்பகம்
40) பெரும் மழை நாட்கள் நாவல்-சா. கந்தசாமி – நற்றிணை பதிப்பகம்
41) அழகிய பெரியவன் கதைகள்-நற்றிணை பதிப்பகம்
42) புதிய வாசல் -தொகுப்பும் அறிமுகமும்: ஜெயமோகன்-நற்றிணை பதிப்பகம்
43) விலங்குப் பண்ணை -ஜார்ஜ் ஆர்வெல் தமிழில்: க.நா.சு.-நற்றிணை பதிப்பகம்
44) காடு பெருசா அழகா இருந்துச்சி -யாழினி – இயல்வாகை பதிப்பகம்
45) தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் -தீ .கார்த்திக் -இயல்வாகை பதிப்பகம்
46) நீலநாயின் கண்கள் – மொழிபெயர்ப்பு கதைகள் -அசதா – நாதன் பதிப்பகம்
47) ஆலய பிரவேச உரிமை  -சிதம்பரம் பிள்ளை – சந்தியா பதிப்பகம்
48) முதல் மனிதன் – ஆல்பெர் காம்யூ –  க்ரியா பதிப்பகம்
49) நடன மங்கை  – சுரேஷ்குமார இந்திரஜித் – உயிர்மை  பதிப்பகம்
50) முதல் தனிமை  -ஜே.பி.சாணக்யா  -காலச்சுவடு பதிப்பகம்
51)தந்தை கோரியோ- பால்சாக்-சாகித்ய அகாதமி வெளியீடு
52) தென் காமரூபத்தின் கதை ,இந்திரா கோஸ்வாமி  சாகித்ய அகாதமிவெளியீடு
••
எனது நாவல் நிமித்தம்  மற்றும்  காந்தியோடு பேசுவேன், இலக்கில்லாத பயணி, ஏழு இலக்கிய உரைகள், சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் உள்ளிட்ட  அனைத்தும்  உயிர்மை அரங்கு 120ல் கிடைக்கும்
••
நான் எழுதிய மறைக்கபட்ட இந்தியா, எனது இந்தியா, துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, சிறிது வெளிச்சம் நூல்கள் விகடன் பதிப்பக அரங்கில் கிடைக்கின்றன
••
குழந்தைகளுக்காக நான் எழுதிய சிரிக்கும் வகுப்பறை,  அக்கடா   இரண்டும் வம்சி பதிப்பக அரங்கில் கிடைக்கின்றன
••
கதைக்களம்பம் எனும் ஏழு சிறார் நூல்கள் பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கின்றன
•••
சிந்துபாத்தின் மனைவி, சூரியனை சுற்றுகிறது பூமி நாடகங்களின் தொகுப்பு, கயல்கவின் பதிப்பக அரங்கில் கிடைக்கின்றன,
••
எனது ஏழு இலக்கிய உரைகளின் டிவிடி  டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கிடைக்கின்றன
•••
0Shares
0