மாக்சிம் கார்க்கி விருது

ரஷ்ய அரசின் ஒத்துழைப்புடன் சென்னையில் உள்ள ரஷ்யக் கலாச்சாரம் மற்றும் விஞ்ஞான மையம் வழங்கும் மாக்சிம் கார்க்கி விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் உள்ள ரஷ்யக் கலாச்சாரம் மற்றும் விஞ்ஞான மையம் தனது நாற்பதாவது ஆண்டு துவக்கவிழாவைக் கொண்டாடுகிறது, இதனை ஒட்டி  ரஷ்ய இலக்கியம் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு உறுதுணை செய்த தமிழகத்தின் பல்துறை கலைஞர்களையும், இந்தியக் கலைகளின் மீது ஆர்வம் கொண்ட ரஷ்ய கலைஞர்களையும் கௌரவிக்கும் விதமாக பல்வேறு விருதுகளை இந்தோ ரஷ்ய நட்புறவு …

மாக்சிம் கார்க்கி விருது Read More »

பேருரையின் மூன்றாம் நாள்

மூன்றாம் நாள் பேருரை கேட்பதற்கு அரங்கில் இடம் கிடைக்காமல் நின்றபடியே கேட்டவர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் மேலிருக்கும்,  பார்வையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவும் அன்பும் பேசுவதற்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிறது சத்யஜித்ரே குறித்து விரிவான மலர் வெளியிட்ட பொன்விஜயன் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன், எப்படியோ அது விடுபட்டு விட்டது, இரவு அவரைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன், அற்புதமான மனிதர், சென்னையில் சிறிய டிரில் அச்சகம் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமங்களுடன் வாழ்ந்து மறைந்தவர், அவருக்கு ரே மீது தீவிரமான …

பேருரையின் மூன்றாம் நாள் Read More »

பேருரையின் இரண்டாம் நாள்

இன்றைய தினமலர் நாளிதழில் எனது உலகசினிமாப் பேருரை பற்றிய செய்தியும் எனது பேச்சின் சுருக்கமும் வெளியாகி உள்ளது, தினமலர் இதழுக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ••• பேருரையின் இரண்டாம் நாளிலும் அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள், நேற்றைய உரையில் பிரான்சுவா த்ரூபோ பனிரெண்டு வயதில் வீட்டில் இருந்து  ஒடிப்போனதைப்பற்றி விவரிக்கையில் எனது பால்யமும் வீட்டை விட்டு ஒடிய நினைவுகளும் பீறிட்டன, பால்ய வயதின் நினைவுகள் திரைப்பட இயக்குனர்களிடம் எப்படி காட்சிகளாக வெளிப்படுகின்றன, குழந்தைகளின் உலகை …

பேருரையின் இரண்டாம் நாள் Read More »

பேருரையின் முதல்நாள்

உலக சினிமா பேருரையின் முதல்நாள் நிகழ்விற்கு பெரும்திரளாக மக்கள் வந்திருந்தார்கள், அரங்குநிரம்பி நின்று கொண்டே பலரும் கூட்டம் கேட்டனர், இந்த பேருரை நிகழ்வை இயக்குனர் திரு. பாலுமகேந்திரா அவர்கள் துவக்கி வைத்து  உரையாற்றினார், விழாவிற்கு வந்திருந்த இயக்குனர் வசந்தபாலன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், எழுத்தாளர் இறையன்பு ஐஏஎஸ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரையுலகினை சேர்ந்த முக்கிய இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குனர்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர், நிறைய கல்லூரி மாணவர்களையும், உதவி …

பேருரையின் முதல்நாள் Read More »

புதியபுத்தகங்கள்

இந்த ஆண்டு எனது நான்கு புதியபுத்தகங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிட உள்ளது, அதன் வெளியீட்டு விழா தி,நகர் சர்.பி.டி, தியாகராயர் ஹாலில் டிசம்பர் 10ம் தேதி  எனது உலகசினிமா பேருரை நிகழ்வோடு சேர்ந்து நடைபெற உள்ளது, வெளியிடப்பட உள்ள புத்தகங்கள் பற்றிய விபரம் மழை மான் – சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு ரயிலேறிய கிராமம் -உலகப்புகழ்பெற்ற முப்பது புத்தகங்களைப் பற்றிய அறிமுக நூல் பறவைக்கோணம் -உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த தமிழ்சினிமா பற்றிய கட்டுரைகள் பிகாசோவின் கோடுகள் …

புதியபுத்தகங்கள் Read More »

பிரெஞ்சில்

எனது சிறுகதை `இயல்பு` பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் வெங்கட சுப்புராய நாயகர், பிரான்சில் வாழும் எழுத்தாளர் நாகரத்னம் கிருஷ்ணா , தமிழுக்கும் பிரெஞசு இலக்கியத்திற்குமான உறவை ஏற்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இணையதளத்தில் இக்கதை வெளியாகி உள்ளது https://franceindechassecroise.wordpress.com/

பேருரை -அறிவிப்பு

உலக சினிமா பேருரைகளில் கலந்து கொள்ள ஏதாவது கட்டணம் உள்ளதா எனப் பலரும் கேட்டுள்ளார்கள், கட்டணம் எதுவுமில்லை விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம், சென்ற ஆண்டு வெளியானதைப் போலவே இந்த ஆண்டும் பேருரைகள் தனிடிவிடியாகவும் வெளியிடப்பட இருக்கின்றன டிசம்பர் 4 முதல் 10 வரை  தினமும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது, இதில் ஞாயிறு மட்டும் காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அரங்கில் உயிர்மை வெளியிட்டுள்ள எனது புத்தகங்களும், சென்ற ஆண்டு …

பேருரை -அறிவிப்பு Read More »

காந்தியைப் பின்தொடர்வது

இந்த ஆண்டு மகாத்மா காந்தி குறித்து நான்கு விரிவான உரைகளை நிகழ்த்தியிருக்கிறேன்,  மதுரை, திருச்சி, கடலூர், சென்னை ஆகிய நான்கு இடங்களிலும் நான்கு வேறு விதமான தலைப்புகள், அதில் மூன்று கூட்டங்கள் மாணவர்கள் மத்தியில், ஒன்று எனது புத்தக வெளியீட்டுவிழாவில். ஒவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் காந்தியின் குரலை இரண்டு நிமிஷம் ஒலிக்கவிடுவேன், காந்தியை ஒரு புகைப்படமாக, சிலையாக, பிம்பமாகத் தான் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம், அவரது குரலை இந்த தலைமுறையினர் கேட்கவேயில்லை, அதற்காக இரண்டு நிமிஷங்கள் காந்தியின் …

காந்தியைப் பின்தொடர்வது Read More »

மண்ணில் விழும் தானியம்

Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit- bible என்ற பைபிள் வாசகத்தை டால்ஸ்டாய் தனது டயரியில் அடிக்கோடிட்டு குறித்திருக்கிறார், அவருக்கு மிகவும் விருப்பமான வாசகமிது, அதை வாசித்த நிமிஷத்தில் இருந்து அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். மரணத்திற்குப் பிறகு தன்னை கல்லறையில் புதைக்க கூடாது, கல்லறைவாசகம் …

மண்ணில் விழும் தானியம் Read More »