நன்றி

எனக்கு இயல் விருது கிடைத்துள்ளதற்காக உயிர்மை நடத்திய பாராட்டுவிழா காமராஜர் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து , பேராசிரியர் ஞானசம்பந்தம், இறையன்பு ஐஏஎஸ், விஜயசங்கர்(எடிட்டர் பிரண்ட்லைன்) செம்மலர் ஆசிரியர் எஸ்ஏபெருமாள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள் சூப்பர் ஸ்டாரின் உணர்ச்சிபூர்வமான உரை நிகழ்வின் தலையான விஷயமாக இருந்தது, எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியம் மீதான அவரது ஈடுபாடும் அக்கறையும் முன்னோடியான செயல்பாடு என்றே சொல்வேன் வைரமுத்து அவர்கள் எனது புத்தனாவது …

நன்றி Read More »

பாராட்டு விழா

கனடா தேசத்தின் இலக்கியத்தோட்டம் வழங்கும் சர்வதேச இலக்கிய விருதான இயல்விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு உயிர்மை சென்னையில் பிரம்மாண்டமான ஒரு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது இந்த விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெற இருக்கிறது இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இந்திரா பார்த்தசாரதி,  பேராசிரியர் ஞானசம்பந்தம், …

பாராட்டு விழா Read More »

பரோட்டா மகாத்மியம்

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் என்ற ஷாநவாஸின் புத்தகத்தை வாசித்தேன், முன்னதாக இவரது கட்டுரைகளில் சிலவற்றை உயிரோசையில் வாசித்திருக்கிறேன், பரோட்டா குறித்து மிகச்சுவையாக எழுதப்பட்ட  முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ள சிறந்த புத்தகமிது, உணவுக்கலாச்சாரம் பற்றி தமிழில் அதிக புத்தகங்கள் வருவது கிடையாது, சமையல்குறிப்புகளை புத்தகங்களாக எழுதும் பலருக்கும் உணவின் வரலாறு தெரியாது, அது ஏற்படுத்திய கலாச்சார மாற்றங்கள் மற்றும் புதிய ருசியின் தனித்துவங்கள் பற்றித் தெரியாது, ஆனால் ஷாநவாஸ் பரோட்டாவின் சகலபரிமாணங்களையும் படிப்பவர் …

பரோட்டா மகாத்மியம் Read More »

சிரிப்பு விருந்து

பீட்டர் செல்லர்ஸின் The Party என்ற படத்தினை நீண்டநாட்களுக்குப் பிறகு மறுபடியும் நேற்றிரவு பார்த்தேன், பீட்டர் செல்லர்ஸ் எனக்கு விருப்பமான நகைச்சுவை நடிகர், அவரை வூடி ஆலனோடு ஒப்பிடலாம், ஆனால் வூடி ஆலனிடம் உள்ள அறிவார்ந்த நகைச்சுவை இவரிடம் கிடையாது, சாப்ளினோடு ஒப்பிட்டால் சாப்ளினின் உடல்மொழி இவருக்கு வராது, இது ஒரு தனிவகை, மலையாள சினிமாவில் இடம் பெறும் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தவர்களுக்கு அந்த வகை காமெடியின் ஆதர்ச நாயகன் பீட்டர் செல்லர்ஸ் என்று புரியும், ஒரு …

சிரிப்பு விருந்து Read More »

காந்தி அவதூறுகள்

பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்கு பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் இது போன்ற அவதூறுகள் எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கபடுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன், அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும் போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது Mahatma Gandhi was invited to take participate in …

காந்தி அவதூறுகள் Read More »

காட்டப்படும் மறு கன்னம்

எனது சிறுகதை ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளேயின் நாடகநிகழ்வு பற்றி டாக்டர் ராமானுஜம் ஒரு நல்ல பதிவை எழுதியிருக்கிறார், அறிவியல் குறித்த விவாதங்களை உருவாக்கும் இந்த நாடகநிகழ்வு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது •• காட்டப்படும் மறு கன்னம் – டாக்டர். ராமானுஜம் கிறிஸ்துமஸுக்கு முந்தினம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரது எழுத்தில் வெளிவந்த சிறுகதையான ‘ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே!” என்ற சிறுகதையை ஜெயராவ் குழுவினர் அருமையான நாடக வடிவமாக்கி இருந்தனர். மனிதன் தோன்றிய …

காட்டப்படும் மறு கன்னம் Read More »

ஏழு பேருரைகள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா . தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும். பாஷோவின் ஜென் கவிதைகள். ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்.  ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் , ஹோமரின் இலியட் உள்ளிட்ட எனது உலக இலக்கியப்பேருரைகளின் ஏழு டிவிடிகளையும் வாங்குவதற்கு ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது உடுமலை டாட்காமில் இந்த டிவிடிகள் கிடைக்கின்றன https://udumalai.com/?name=&type_id=44 தமிழ்நாட்டிற்குள் தேவைப்படுகின்றவர்கள் attcharam@gmail.com முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பவும் , அல்லது 94451 91114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் **

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும்

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரம் திருவண்ணாமலை என்று எப்போதுமே சொல்வேன், அப்படித் திருவண்ணாமலையை ஒரு இலக்கிய சங்கமமாக மாற்றியமைத்தவர் எனதருமை நண்பர் பவா செல்லத்துரை. அவர் மீடியா வாய்ஸ் இதழில் எங்களது நட்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், வாசிக்கையில் மனம் நெகிழ்ந்து போனேன்.  அரஸ் வரைந்துள்ள எனது ஒவியம் மிக துல்லியமாக, சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. எத்தனையோ இரவுகளில் பவா வீட்டுக்கதவை தட்டி அவரது அம்மா சமைத்து தரும் உணவைச் சாப்பிட்டு விடிய விடிய இலக்கியம் பேசியிருக்கிறேன், எனக்கும் …

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும் Read More »

இயல் விருது

2011 ம் ஆண்டுக்கான இயல் விருது எனக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கனடா தேசத்தில் இருந்து வழங்கப்படும் புகழ்பெற்ற சர்வதேசிய இலக்கிய விருதாகும், வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருதாக வழங்கப்படுகிறது . 1500 கனேடிய டாலர் பரிசுத்தொகையும் பாராட்டு பத்திரமும் கொண்டது, இதற்கான விருது வழங்கும்விழா ஜுன் மாதம் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற உள்ளது, அதில் கலந்து கொண்டு விருது பெற இருக்கிறேன் சுந்தர ராமசாமி, ஜோர்ஜ் எல் ஹார்ட், அம்பை, கோவை ஞானி, …

இயல் விருது Read More »