பெரியார் விருது

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி, சமூகத்தில் சிறந்து விளங்கும் தமிழர்களைப் பாராட்டும் விதமாகப் “பெரியார் விருது” வழங்கி வருகிறது. திரு கி.வீரமணி அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் அமைப்பிது. இவ்வாண்டிற்கான ’பெரியார் விருது’ எனக்கு அளிக்கப்படுவதாக பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவித்துள்ளது இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 15 முதல் 17 வரை நடைபெற உள்ள பெரியார் முத்தமிழ் மன்றத்தின் தைப்பொங்கல் விழாவில் நடைபெறும். **

சவரக்குறிப்புகள்

கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற அரங்காடல் நாடக நிகழ்வில் எனது சிறுகதையை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட நாடகமான சவரக்குறிப்புகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது என்று கனடாவில் இருந்து நண்பர் நாராயணமூர்த்தி தகவல் அனுப்பியிருந்தார். நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றம் செய்த மனவெளி கலையாற்றுக்குழு மற்றும் இந்த நாடகப்பிரதியை உருவாக்கிய திரு. செழியன். நெறியாள்கை செய்த திரு. அ.புராந்தகன். ஆகியோருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் **

எழுத்தின் திசை

பத்திரிக்கையாளர் நந்தினி கிருஷ்ணன் சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்து நிறைய வாசித்து அறிந்தவர், ஆங்கிலத்தில் கதைகள் எழுதிக் கொண்டு வருகிறார் தற்போதைய தமிழ் இலக்கியப்போக்குகள், சவால்கள், மற்றும் எனது கதையுலகம் குறித்து என்னோடு கலந்துரையாடல் செய்து A writer’s road  என்ற விரிவான கட்டுரை ஒன்றினை Fountain Ink magazine ல் எழுதியிருக்கிறார், அதற்கான சுட்டி https://fountainink.in/?p=875 முழுமையான கட்டுரையை அவரது வலைப்பக்கத்தில் வாசிக்கலாம் அதற்கான சுட்டி https://disbursedmeditations.blogspot.com/2012/01/writers-road.html ••

வாசகர் கலந்துரையாடல்

இன்று புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற வாசகர் கலந்துரையாடலில் நான் பேசினேன், பாரதி புத்தகாலயத்தை சேர்ந்த நண்பர் நாகராஜன் அந்த நிகழ்வை ஒருங்கிணைவு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள், கூட்டம் நிரம்பி வெளியே  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டே கேட்டார்கள், இலக்கியம், புத்தகவாசிப்பு, சினிமா, பயணம், மகாபாரதம், கல்வி , ஏழு இலக்கியப்பேருரைகள், பௌத்தம் என்று பல்வேறு துறை சார்ந்த விஷயங்கள் குறித்துக்கேள்விகள் கேட்டார்கள், பத்திரிக்கையாளர் ஞாநி கலந்துரையாடலை ஒருங்கிணைப்பு செய்தார், ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பாக நடந்த கேள்வி …

வாசகர் கலந்துரையாடல் Read More »

புத்தக கண்காட்சியில்

நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்து பதினைந்து புத்தகங்களை வாங்கினேன், இந்த முறை அதிகமான கடைகள் இருக்கின்றன, ஆனால் மிக குறைவாகவே அரிய புத்தகங்கள் உள்ளன, புதிது புதிதாக நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை குவித்திருக்கிறார்கள்,  அதில் பாதிக்கு மேலான புத்தகங்கள் சந்தைக்கு உருவாக்கபட்ட மலினமான சரக்குகள், இரண்டு நாட்களிலும் அதிக கூட்டமில்லை, நாளையில் இருந்து அதிக கூட்டம் வரக்கூடும், இந்த இரண்டு நாட்களில் நான் தேர்வு செய்த முக்கியமான புத்தகங்கள் 1)      ஒக்ககூரா காக்குஜோ எழுதிய ஜப்பானிய …

புத்தக கண்காட்சியில் Read More »

பிரமிளின் ஒவியங்கள்

கவிஞர் பிரமிள் நவீன கவிதையின் தனிப்பெருமை ஆளுமை என்பதோடு  அவர் ஒரு அசாத்தியமான ஒவியர், அவரது கோடுகளில் வெளிப்படும் தெறிப்பும் வலிமையும் விஷேசமானது, அவர் தன்னை வரைந்து கொண்ட ஒவியமும் அவரது நூலின் முகப்புச் சித்திரமாக வந்துள்ள ஒன்றிரண்டு ஒவியங்களையும் தவிர அவரது முழுமையான ஒவியங்கள், சிற்ப வேலைபாடுகள் இதுவரை தனித்துக் காட்சிக்கு வைக்கபடவேயில்லை, அவற்றை காலசுப்ரமணியம் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன், அவர் வரைந்த ஒவியங்களை நான் பார்த்திருக்கிறேன், வான்கோவின் கோடுகளில் உள்ள தெறிப்பைப் போல …

பிரமிளின் ஒவியங்கள் Read More »

பேருரைகளின் வீடியோ

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றிய ஏழு பேருரைகளும் தனித்தனி டிவிடிகளாக முறையாக எடிட் செய்யப்பட்டு எழுத்தாளர்களின் புகைப்படங்கள், மற்றும் நாவலின் திரைவடிவத்தில் இருந்து தேவையான காட்சிகள் இணைக்கப்பட்டு வெளியாகி உள்ளது இந்த வீடியோக்களை அட்சரம் வெளியிட்டிருக்கிறது, இரண்டுமணி நேரமுள்ள ஒரு டிவிடியின் விலை ரூ100, ஏழு டிவிடிகளும் மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ600 விலையில் கிடைக்கும், டிவிடி கூரியரில் அனுப்புவதற்கு ஒரு டிவிடிக்கு ரூ 25 சேர்த்து அனுப்பவும். டிவிடி தேவைப்படுகின்றவர்கள் 9445191114 என்ற எண்ணில் தொடர்பு …

பேருரைகளின் வீடியோ Read More »

புத்தகக் கண்காட்சி

ஜனவரி 5ம் முதல் 17 வரை சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது, இதில்  6 தேதி முதல் 11ம் தேதி வரை தினமும் மாலை 4. 30 மணிக்கு உயிர்மை அரங்கிற்கு வருகை தருவேன், சந்திக்க விருப்பம் உள்ள  வாசகர்கள் அவசியம் வரலாம் ••• இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F 35 அரங்கில் இந்த …

புத்தகக் கண்காட்சி Read More »

புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள், வாசகர்கள், அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்த ஆண்டு உங்களுக்கு பெரிய வெற்றிகளையும் நல்ல ஆரோக்கியத்தையும், மேன்மையான எண்ணங்களையும், சந்தோஷமான உறவுகளையும் தருவதற்கு வாழ்த்துகிறேன். ** புது வருசத்தை கவிதையோடு துவங்குவோம் ஒரம்போகியாரின் ஐங்குறுநூற்று கவிதையிது புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகள் இவள் பாணர் நரம்பினும் இன் கிளவியளே. நீராடும் பெண்கள் குளிப்பதற்கு முன்பாக தன்னுடைய அணிகலன்களை கழட்டிக் கரையில் …

புத்தாண்டு வாழ்த்துகள் Read More »

ஷரீபின் வரிகள்

கர்நாடகத்தில் வாழ்ந்த ஞானியான ஷரீஃப் பற்றி பாவண்ணன் மிகச்சிறப்பான ஒரு கட்டுரையை திண்ணை இணைய இதழில் எழுதியிருக்கிறார், நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மகத்தான ஞானி ஷரீஃப். கர்நாடகாவின் சிறுநகரம் ஒன்றில் தான் ஷரீஃப்பின் பாடல்களைக் கேட்ட அனுபவத்தை அற்புதமாக விவரித்திருக்கிறார், அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பாடலிது, இதை வாசித்த நேரத்தில் இருந்து குரங்கைக் கோழி விழுங்கியதே என்ற வரிகள் மனதில் ஒலித்தபடியே இருக்கின்றன, சாத்தியமற்ற ஒன்றைச் சொல்வதன் வழியே மின்னல்வெட்டென ஒரு அகதரிசனத்தை …

ஷரீபின் வரிகள் Read More »