தங்க வேட்டை
அமெரிக்க எழுத்தாளரான ஜாக் லண்டனின் (Jack London) ஒயிட் பேங்க் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட ஹாலிவுட் படத்தை நேற்றுப் பார்த்தேன் ஜாக் லண்டனின் கானகத்தின் குரல் (The Call of the Wild) என்ற நாவல் மிகவும் பிரபலமானது, அந்த நாவலின் தொடர்ச்சியைப் போல அமைந்துள்ளது ஒயிட் பேங் கானகத்தின் குரல் நாவலில் பழக்கபடுத்தப்பட்ட நாயின் உள்ளே மறைந்திருக்கும் உக்கிரமான மனநிலையை, இயல்பான மூர்க்கத்திற்குத் திரும்ப முற்படும் ஆசையை எழுதிய ஜாக் லண்டன், அதற்கு நேர்எதிரான …