கோவை இலக்கியச்சந்திப்பு

டிசம்பர் 17ம்தேதி சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு கோவையில் ஒரு இலக்கியச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சந்தித்துப் பேச விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் இந்த நிகழ்வினை தமிழின் முக்கிய ஆளுமையான ஞானி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்கிறார். இடம் : சிபி ஐஏஎஸ் அகாதமி வளாகம், காந்திபுரம், கோவை. கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்க:   ராமச்சந்திரன் 918012638277. டிசம்பர் 18 மாலை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பூமணி அவர்களுக்கு விருதுவழங்கப்படும் நிகழ்வில் பேச இருக்கிறேன், …

கோவை இலக்கியச்சந்திப்பு Read More »

நெருப்பைத்தேடி

நெருப்பை பெண்கள் அளவிற்கு ஆண்கள் நுட்பமாக அறிந்திருக்கவில்லை, ஆணிற்கு நெருப்பு என்பது வியப்பான ஒரு பொருள், அல்லது வெறும்பயன்பாட்டு பொருள் .யாகத்தின் போது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் முன்னமர்ந்து மந்திரஉச்சாடனம் பொங்கி வழிய ஆண் நெருப்பை ஆராதனை செய்கிறான், பெண்களோ நெருப்பை ஸ்நேகப்பூர்வமாகப் பார்க்கிறார்கள், பலவேளைகளில் நெருப்போடு பேசுகிறார்கள், சமையலுக்கு கை கொடுக்கச்சொல்லி கூப்பிடுகிறார்கள், நெருப்பு வராமல் புகை மட்டுமே எழும்போது திட்டுகிறார்கள்.  விளக்கில் எரியும் நெருப்பிற்கும் அடுப்பில் எரியும் நெருப்பிற்கும் உள்ள பேதம் அவர்களுக்கு நன்றாகத் …

நெருப்பைத்தேடி Read More »

அந்தக் காலத்திலே

லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் விருப்பமான கதையிது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, எளிய கதை போல வெளிப்படையாக தோன்றினாலும் அது சுட்டிக்காட்டும் உண்மை மிகவும் ஆழமானது ••• அந்தக் காலத்திலே : லியோ டால்ஸ்டாய் முன்பு ஒருநாள், பள்ளத்தாக்கு ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் முட்டை போல் பெரியதாக உருண்டு திரண்டிருந்த பொருள் ஒன்றைக் கண்டெடுத்தனர். இதன் நடுவில் வடுப்போல் பள்ளமாயிருந்ததால், தானிய மணி போலிருந்தது. குழந்தைகளிடம் இதைக் கண்ட …

அந்தக் காலத்திலே Read More »

தென்றல்

வடஅமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் இதழில் எனது நேர்காணல் வெளியாகி உள்ளது அதற்கான இணைப்பு https://tamilonline.com/thendral/

சாரல் விருது

2012ம் ஆண்டுக்கான சாரல் விருது எழுத்தாளர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி தனது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் வழங்குகிறார்கள், விருது வழங்கும் நிகழ்வு ஜனவரியில் சென்னையில் நடைபெற உள்ளது வண்ணதாசன், வண்ணநிலவன் இருவரும் ஒருங்கே விருதுபெறுவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது, இருவருமே என் விருப்பதிற்குரிய எழுத்து ஆளுமைகள் தமிழ் இலக்கியத்தின் மகத்தான இரண்டு கலைஞர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ••

புதிய தொடர்

ஜுனியர் விகடன் இதழில் எனது இந்தியா என்ற புதியதொடர் ஒன்றினை எழுத இருக்கிறேன், இது அடுத்த  இதழ் முதல் வெளியாகிறது அது குறித்த விளம்பரம் வெளியாகி உள்ளது •• எனது இந்தியா வரலாறு என்ற பறவைக்கு கடந்த காலம்  நிகழ்காலம் என்ற இரண்டு சிறகுகள் இருக்கிறது, அது நிகழ்காலம் எனும் வானில் பறந்து கொண்டிருக்கிறது, பறத்தலின் ஊடே எத்தனையோ இறகுகள் உதிர்ந்தாலும் மறுபடியும் முளைத்துக் கொண்டேதானிருக்கிறது. எப்போதும் போல பறவையும் முன்னெடுத்து பறந்து கொண்டேதானிருக்கிறது. மன்னர்களின் வாழ்க்கை …

புதிய தொடர் Read More »

அரங்காடல்

கனடாவின் டொரோண்டோ நகரில் செயல்பட்டுவரும் மனவெளி கலையாற்றுக்குழு எனும் நாடக அமைப்பு  நவீன தமிழ்நாடகங்களை மிகச்சிறப்பாக நிகழ்த்தி வருகிறது. ஆண்டுதோறும் புதிய நாடகங்களை மேடையேற்றம் செய்வதற்கு அரங்காடல் என்ற நிகழ்வினையும் ஏற்பாடு செய்துவருகிறார்கள், இது குறித்து நண்பர் செல்வன் வழியே நிறைய அறிந்திருக்கிறேன். 2012 ஜனவரி எட்டாம் தேதி டொரோண்டோ நகரில் நடைபெற உள்ள அரங்காடல் நிகழ்வில் எனது கடவுளின் குரலில் பேசி என்ற சிறுகதையின் நாடகவடிவம் நிகழ்த்தப்பட இருக்கிறது, இந்த நாடகப்பிரதியை உருவாக்கியவர் செழியன். நெறியாள்கை …

அரங்காடல் Read More »

டின்டின்

Tintin and I என்ற பிரெஞ்சு டாகுமெண்டரிப் படத்தை பார்த்தேன், Anders Høgsbro Østergaard  இயக்கியது, சமீபமாக டின்டின் திரைப்படம் வெளியாகி பரபரப்பாகப் பேசப்படும் சூழலில் டின்டினை வரைந்த பெல்ஜிய ஒவியரான ஹெர்ஜி பற்றிய இந்த ஆவணப்படத்தை இணையத்தில் தேடிவாங்கினேன். எனது பள்ளிநாட்களில் டின்டின் காமிக்ஸின் ரசிகனாக இருந்தேன், அந்த நாட்களில் டின்டின் வாங்குவதற்காக மதுரைக்குப் போய்வர வேண்டும், அதுவும் எளிதாக கிடைத்துவிடாது, பலநேரம் வாடகை நூலகம் ஒன்றில் இருந்து தேடிஎடுத்து  வாசித்திருக்கிறேன், டின்டின் என்ற சிறுவனைப் பிடித்ததிற்கு …

டின்டின் Read More »

அன்னா ஏன் தற்கொலை செய்தாள்?

ஆர்.அபிலாஷ் (21-11-11 அன்று ரஷ்ய  கலாச்சார மையத்தில்  அன்னா கரீனினா  நாவல் பற்றி  எஸ்.ரா. ஆற்றிய உரை குறித்த ஒரு பதிவு ) எஸ்.ரா. தன்  பேச்சில் அன்னா கரீனினாவின் சமகால தேவையை வலியுறுத்தினார். இன்றும் திருமணத்துக்கு வெளியே உறவு நாடி அவதிக்குள்ளாகும் பெண்கள் உள்ளார்கள். இது முகநூல் யுகத்தில் இன்னும் தீவிரமாகிப் போவதைச் சொன்னார். இது ஏன் நிகழ்கிறது? குடும்பம் எனும் அமைப்பின் தேவை என்ன? அதன் வரையறைகளை மீறி உடைத்துக் கொண்டு ஒருவன் ஏன் …

அன்னா ஏன் தற்கொலை செய்தாள்? Read More »

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு மாலைகள்

அய்யப்ப மாதவன் புயல்தோன்றிய சென்னை நகரத்தில் எங்கு பார்த்தாலும் நீர். நீரைத் தவிர ஒன்றுமில்லையென்று நினைத்திருந்த வேளை, ரஷ்ய கலாச்சார மையத்தையும் சூழ்ந்திருந்த வெள்ளம். சுவர்கள் நாற்புறமும் தடுக்கப்பட்ட சதுர அரங்கில் காலியற்ற இருக்கைகள். நாற்காலிகளெங்கும் மனித வெள்ளம். எஸ்.ரா கருமேகங்களென பொழிந்துகொண்டிருந்தார். இலக்கியமென்பது நலிந்து மெலிந்து போய்க்கொண்டிருக்கிற காலத்தில் இலக்கியத்தை மேம்படுத்தும் காரியத்திலிருந்தார் எஸ்.ரா. அரங்கு சற்றுத் தள்ளியிருந்த கடலிலும் பேரலைகள். இவ்வரங்கத்தை நோக்கியும் மனித அலைகள். ஒரு நாள் இரண்டு நாள்களில்லை. ஒரு வாரகாலம் …

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு மாலைகள் Read More »