நாவல்களே உலகை ஆள்கின்றன
இன்றைய தேதியில் உலகில் அதிகம் வாசிக்கபடுவது எது, கவிதையா, நாவலா, கட்டுரைகளா, சுயமுன்னேற்ற நூல்களா என்ற விவாதம் முடிவில்லாமல் நடந்து கொண்டேதானிருக்கிறது, புள்ளிவிபரங்களைப் பார்க்கையில் நாவலாசிரியர்களே அதிகம் வாசிக்கவும் கொண்டாடவும் படுகிறார்கள் என்பதே நிஜம். ஹாரிபோட்டர் 450 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, டாவின்சி கோடு 80 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது, ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முராகமியின் நாவல் 13 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, இந்த வரிசையில் நூறு மில்லியனுக்கும் மேல் விற்பனையாது என்று இருபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன, …