கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற அரங்காடல் நாடக நிகழ்வில் எனது சிறுகதையை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட நாடகமான சவரக்குறிப்புகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது என்று கனடாவில் இருந்து நண்பர் நாராயணமூர்த்தி தகவல் அனுப்பியிருந்தார்.
நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றம் செய்த மனவெளி கலையாற்றுக்குழு மற்றும் இந்த நாடகப்பிரதியை உருவாக்கிய திரு. செழியன். நெறியாள்கை செய்த திரு. அ.புராந்தகன். ஆகியோருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
**