அது தான் சாப்ளின்

சினிமாவில் மௌனம் என்பதே முற்றிலும் புறக்கணிக்கபட்ட ஒன்றாகிவரும் சூழலில் மொத்தப் படத்தையும் உரையாடல்களின் உதவியில்லாமலே ரசிக்க முடியும் என்ற மௌனப்படக்காலம்  இன்றைய சினிமாப் பார்வையாளனுக்கு வியப்பூட்டும் புதிர், அதிலும் நகைச்சுவை என்றாலே வாய்ஒயாமல் பேசிக் கொண்டேயிருப்பது என்ற சமகாலச் சூழலில் சாப்ளினை நினைவூட்டவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை மறுபடி நினைவுறுத்துவதும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது, சாப்ளின் நடித்த முதல் திரைப்படம் மேக்கிங் எ லிவிங், மௌனப்படமான இதை கீஸ்டோன் ஸ்டுடியோதான் தயாரித்தது.  அப்போது சாப்ளினுக்கு இருபத்திமூன்று …

அது தான் சாப்ளின் Read More »

பீட்டர் புருக் மகாபாரதம்

பீட்டர் புருக் (Peter Brook) ஒன்பது மணிநேர நாடகமாகத் தயாரித்த மகாபாரதம் நான்கு மணி நேரங்களுக்கு ஒடும் திரைப்படமாகவும் வந்திருக்கிறது, நம் மனதில் மரபாகப் பதிந்து போய்விட்ட கிருஷ்ணன் பீஷ்மர் கர்ணன் பாண்டவர்களைப் பற்றிய சித்திரங்களை முழுமையாக மாற்றியமைக்கிறது இந்தப்படம், இதை முழுமையான மகாபாரதம் என்று சொல்லமுடியாது , மாறாக மகாபாரதக் கதையைப் பீட்டர் புருக் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதன் வெளிப்படாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது, இதற்கான திரைக்கதையை எழுதியவர் உலகப்புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் ஜீன் கிளாடே …

பீட்டர் புருக் மகாபாரதம் Read More »

டி.எம்.கிருஷ்ணா

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் உரையைக் கேட்பதற்காக நேற்று மாலை நடைபெற்ற கேணி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன், நான் அதிகம்  இசைகேட்கிறவனில்லை, ஆனால் கிருஷ்ணா பாடிய சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன், தனித்துவமான குரல் அவருடையது,  கிருஷ்ணா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ இருவரது கச்சேரியை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட மார்கழி ராகம் என்ற திரைப்படம்  எனக்குப் பிடித்திருந்தது, நேற்று அவர் கர்நாடக இசையை அறிமுகப்படுத்திப் பேசியதும் அதைத் தொடர்ந்த விவாதங்களுக்குப் பதில் அளித்ததும் மிகச்சிறப்பாக இருந்தது, இசை தொடர்பான அவரது ஆழ்ந்து தெளித்த …

டி.எம்.கிருஷ்ணா Read More »

ரோஷாமானில் மழை பெய்து கொண்டிருக்கிறது

அகிரா குரசோவாவின் ரோஷாமானை மறுபடியும் நேற்றிரவில் பார்த்தேன், திரைப்பட விழாக்களில், பயிலரங்குகளில், தனிக்காட்சிகளில் என அந்தப்படத்தை இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன், இன்றும் அதன் வசீகரம் குறையாமலே இருக்கிறது. இந்த முறை படம் பார்த்தது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் தருவதாக இருந்தது, காட்சிகள், கதை சொல்லும்முறை யாவும் கடந்து போய் படத்தின் ஆதாரத்தொனியாக உள்ள அறத்தைப் பற்றியே மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது, ஒருவகையில் அது அகிரா குரசோவாவின் திரைப்படங்களில் எது முதன்மையாகக் கவனம் கொள்ளப்படுகிறது என்பதை அடையாளம் …

ரோஷாமானில் மழை பெய்து கொண்டிருக்கிறது Read More »

இரங்கல்

ஈழத் தமிழ் இலக்கிய த்தின் மிக முக்கிய ஆளுமையும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார். அவரது மறைவிற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ••

திருக்கோகர்ணத்து ரதி

சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை அருகில் உள்ள திருக்கோகர்ணம் கோவிலின் சிற்பமண்டபத்தில் உள்ள ரதி சிற்பத்தைக் கண்டேன், ஆஹா, என்ன ஒரு பேரழகு, அவள் சிலையில்லை, நம் மனதின் ஆழத்தில் புதைந்துள்ள மாறாத பெண்மையின் எழில் உருவம், இவளை எங்கோ வீதியில் தற்செயலாகப் பார்த்திருக்கிறோம் என்பது போன்ற நெருக்கம் உருவாகிறது தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் ரதி மன்மதன் சிற்பங்கள் பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு ரதியும் ஒரு அழகு, கல்லில் செய்த சிற்பங்கள் என்றாலும் பெண் உடலின் …

திருக்கோகர்ணத்து ரதி Read More »

திரும்பிப் பார்

அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை. சென்னை. திருச்சி பற்றிய அரிய ஆவணக்காட்சிகளின் தொகுப்பு இது பழைய மதுரையின் வீதிகளில் குதிரை வண்டிகள் கடந்து போவது, சுழித்தோடும் வைகை ஆற்றில் மீன்பிடிப்பது. வெற்றிலை வியாபாரம் செய்யும் பெண்கள், துறவிகள், எளிய மனிதர்கள். சிறுவர்கள், பாம்படம் அணிந்த பெண்கள்.  கோவிலின் அழகு ஒளிரும் புறத்தோற்றம் என மதுரையின் கடந்தகாலத்தைப் பார்க்க பார்க்க நெகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது. Old Madurai, South India, in 1945 and now https://youtu.be/TV21eP0uu_0 Old …

திரும்பிப் பார் Read More »

தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ்

உலகப்புகழ்பெற்ற நாவல்களை மறுவாசிப்பு செய்வதற்கு எளிதாக புதிது புதிதாக பல பதிப்புகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அதிலும் புகழ்பெற்ற நாவல்களை இளம்வாசகர்கள் படிக்கும் வகையில் காமிக்ஸ் வடிவத்தில் வெளியிடுகிறார்கள், நடைபாதைக் கடை ஒன்றில் தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ் ஒன்றை வாங்கினேன், தஸ்தாயெவ்ஸ்கியின் கதையில் பேட்மேனின் கதாபாத்திரம் இணைந்து உருவாக்கப்பட்ட விசித்திரமான காமிக்ஸ் இது R Sikoryak என்ற ஒவியர் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ்வை பேட்மேன் முகமூடி அணிந்த சாசகநாயகனாக உருமாற்றி பகடி செய்வதன் வழியே இந்த காமிக்ஸை உருவாக்கியிருக்கிறார், …

தஸ்தாயெவ்ஸ்கி காமிக்ஸ் Read More »

புதிய பதிப்பு

தாகூர் விருது பெற்றுள்ள எனது யாமம் நாவலின் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது, உயிர்மை இதைச் சிறப்பு பதிப்பாக மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறது. விலை ரூ275, UYIRMMAI PATHIPAGAM 1/29 SUBRAMANIYAN STREET ABIRAMAPURAM  CHENNAI-600018. TAMIL NADU TELE/FAX: 91-44-24993448 uyirmmai@gmail.com

அறிவிப்பு

கோவையில் நடைபெற்ற விழாவில் எனக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது, நிகழ்வினை கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், கோவையில் நிறைய இளம்வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி தருவதாக இருந்தது, அன்றைய விழாவில் வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்கள் கம்பனும் கண்ணதாசனும் என்று ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார், கம்பனின் பெருமைகளை அவர் எடுத்துச் சொல்லும் விதம் பரவசம் தருவதாக இருந்தது, வீடு வந்த இரண்டுநாட்களாக நானும் கம்பனில் தான் முழ்கியிருக்கிறேன் •• விகடனில் வெளியாகி …

அறிவிப்பு Read More »