கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது
நேற்று பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனைச் சந்திப்பதற்காக சென்றிருந்தேன், என்னோடு வில்லியனூர் பழநி என்ற நண்பரும் வந்திருந்தார், பழநி உற்சாகமான வாசகர், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் வாழ்க்கையைப் பற்றி கவிதை வடிவில் ஒரு நூலை எழுதியிருக்கிறார், கி.ராஜநாராயணன் வீடு விமானநிலையம் செல்லும் சாலையில் உள்ள லாஸ்பேட் ஏரியாவின் அரசுக் குடியிருப்பில் உள்ளது, பைக்கில் அவரது வீட்டை தேடிச் சென்று கொண்டிருந்தோம், மழைக்குப் பிந்திய சாலைகளில் ஆங்காங்கே நீர்தேங்கியதால் வாகனநெருக்கடி அதிகமாக இருந்தது. முந்திய இரவு நல்ல மழை பெய்திருந்தது, …