என் பள்ளி

பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத்  தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம், கையால் தலையைச் சுற்றி காதைத் தொட்டுவிட முடிகிறது என்ற ஒரு தகுதி தான் என்னைப் பள்ளியில் சேர்க்க உதவியது, அது தான் அன்றைய காலத்தின் நுழைவுத்தேர்வும் கூட, பொதுவாக சரஸ்வதி பூஜை காலத்தில் தான் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும், ஆறு வயதில் அப்படி ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பிறகு கடையில் ஆரஞ்சு மிட்டாய்கள் வாங்கிக் கொண்டு …

என் பள்ளி Read More »

சமண நடை

மதுரையில் எனது புத்தக வெளியீட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, புத்தகக் கண்காட்சியில் நிறைய புதிய வாசகர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷம் தருவதாகயிருந்தது, சனிக்கிழமை மாலை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேவதச்சனின் புதிய கவிதை நூலான இரண்டு சூரியன் வெளியானது, அது குறித்து நான் பதினைந்து நிமிசங்கள் பேசினேன், நவீன கவிதையின் இன்றைய சவால்களும் சாதனைகளையும் பற்றி காலையில் கவிஞர்கள் தேவதச்சன், கலாப்ரியா. சமயவேல். மூவருடனும் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது உற்சாகமளிப்பதாகயிருந்தது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து …

சமண நடை Read More »

மதுரை பயணம்

நாளை முதல் செப்டம்பர் 5 வரை மதுரையில் இருப்பேன், மாலை 4 மணி முதல் புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை அரங்கில் என்னைச் சந்திக்கலாம் மதுரையில் நடைபெற உள்ள எனது புதிய புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனது புத்தகங்கள் யாவும் உயிர்மை அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன, யாமம் நாவல் புதிய சிறப்புப் பதிப்பாக வெளியாகி உள்ளது. உப பாண்டவம் நாவலின் புதிய பதிப்பு அழகான வடிவமைப்புடன் …

மதுரை பயணம் Read More »

உயிர்மை அழைக்கிறது

மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா நாள் 3.9.2011 சனிக்கிழமை நேரம் மாலை 4  மணி இடம்: புத்தக கண்காட்சி மைதானம் தமுக்கம் மைதானம் மதுரை வெளியிடப்படும் நூல்கள் 1) இரண்டு சூரியன் தேவதச்சன் 2) சேகுவேரா வந்திருந்தார் வா.மு.கோமு 3) திரைப்படக் கலை முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி 4) ஈழத்து நாட்டார் பாடல்கள் தொகுப்பு: ஈழவாணி வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன் சிறப்புரைகள்: 1) மு.ராமசாமி 2) எஸ்.ராமகிருஷ்ணன் 3) சுகுமாரன் 4) ந. முருகேச …

உயிர்மை அழைக்கிறது Read More »

புத்தக வெளியீட்டு விழா

எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவும், தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டு விழாவும் செப்டம்பர் 4ம் தேதி மாலை ஆறுமணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற உள்ளது,  உயிர்மை பதிப்பகம் இந்த விழாவினை நடத்துகிறது, அழகர்கோவில் செல்லும் பிரதான சாலையில் உள்ளது இந்த அரங்கு, வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். நாள் 4.9.2011 ஞாயிற்றுக் கிழமை நேரம் மாலை 6  மணி இடம்: ஹோட்டல் தமிழ் நாடு அழகர் கோயில் சாலை மதுரை …

புத்தக வெளியீட்டு விழா Read More »

ஐந்து இணையதளங்கள்

இவை சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்த முக்கியமான ஐந்து இணையதளங்கள். ஒவ்வொன்றும் தனித்துவமானவை, முக்கியமான இந்த இணையதளங்களின் வழியே வாசிப்பு அனுபவத்தை நாம் மேம்படுத்திக் கொள்ளலாம். தமிழ்தொகுப்புகள் தமிழ் இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது, கட்டுரைகள், சிறுகதைகள். ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்புமுறை இதன் தனிச்சிறப்பு, இம்முயற்சிக்கு காரணமாக இருந்த சிங்கமணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் https://thoguppukal.wordpress.com/ மலேசியாவிலிருந்து ரெ.கா மலேசியாவின் முக்கிய எழுத்தாளரான ரெ.கார்த்திகேசுவின் இணையதளம், அவரது சிறுகதைகள், …

ஐந்து இணையதளங்கள் Read More »

நல்லி-திசை எட்டும் இலக்கிய விருது

2011 ஆண்டிற்கான நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, இதில் ஆங்கிலத்தில் இருந்து நான் மொழியாக்கம் செய்த குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருதினைப்பெற்றிருக்கிறது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில் இயற்கையைப் பற்றி பல்வேறு இனக்குழுவினரிடம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். இந்த விருதிற்கு ரொக்கப் பரிசு ரூ.10,000. மற்றும் பாராட்டுப் பத்திரம் அளிக்கப்படுகிறது. இதற்கான விழா அக்டோபரில் நடைபெற உள்ளது. **

பசியாறிட்டீங்களா.

ஒரு வார கால மலேசியப் பயணத்திலிருந்து இன்று சென்னை திரும்பினேன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நான் நடத்திய மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள், காலை எட்டு மணிக்குத் துவங்கிய பயிலரங்கு இரவு 11 மணிவரை நடைபெற்றது, உற்சாகத்துடன் கூடிப்பேசி விவாதித்தது சிறப்பாக இருந்தது, ஒரு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளில் இருந்து சிறந்த  ஒன்றைத் தேர்வு செய்து ஆயிரம் ரிங்கட் பரிசு தருகிறார்கள், அந்த தேர்வுக்குழு தலைவராக …

பசியாறிட்டீங்களா. Read More »

படித்ததும் பார்த்ததும்

What I Talk About When I Talk About Running என்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமியின் புத்தகம் அவரது ஒட்டப்பந்தய அனுபவங்களை விவரிக்கிறது, முராகமி மராத்தன் ஒட்டத்தில் ஈடுபாடு கொண்டவர், தனது மத்திய வயதில் ஒட்டப்பந்தயங்களில் ஆர்வமாகிய முராகமி அதை ஒரு விளையாட்டு என்பதை தாண்டிய ஆன்மீக அனுபவமாக விவரிக்கிறார், ஒட்டப்பந்தயத்தில் ஒருவன் அடையும் வெற்றி என்பது அவன் எவ்வளவு நிமிசங்களுக்கு ஒடி வெற்று பெறுகிறான் என்பது மட்டுமில்லை, மனிதர்களின் உடல் எவ்வளவு வேகமாக …

படித்ததும் பார்த்ததும் Read More »

மதுரையில் புத்தகவெளியீட்டு விழா

எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழாவும் தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டுவிழாவும் மதுரையில் நடைபெற உள்ளது. உயிர்மை நடத்தும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை ஆறுமணிக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபறெ உள்ளது, இதில் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள், நிகழ்ச்சி பற்றிய முழுமையான விபரங்களை சில நாட்களில் தெரிவிக்கிறேன், செப்டம்பர் 2 முதல் நடைபெறும் மதுரை புத்தக கண்காட்சியில் 3 மற்றும் 4ம்தேதிகளின் பகலில் …

மதுரையில் புத்தகவெளியீட்டு விழா Read More »