குறும்படப் பரிசு

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் 2011ம் ஆண்டிற்கான குறும்படப் போட்டியில் சிறந்த குறும்படமாக நான் கதைவசனம் எழுதி அருண் பிரசாத் இயக்கியுள்ள கொக்கரக்கோ என்ற படம் முதல் பரிசு வென்றுள்ளது, இதற்காக ரூ15 ஆயிரம் பரிசு வழங்கப்பட இருக்கிறது, சிறந்த படத்தொகுப்பிற்கான பரிசும் நான் கதைவசனம் எழுதி அருண் பிரசாத் இயக்கியுள்ள பிடாரன் படத்திற்குக் கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற அருண்பிரசாத்தையும் அவரது குழுவினர்களையும் மனம் நிறைய வாழ்த்துகிறேன். **

மகத்தான சந்திப்பு

  ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன், அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன், வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு …

மகத்தான சந்திப்பு Read More »

உயிர்கொல்லி

சனிக்கிழமை கோவையில் நடைபெற்ற என்டோசல்பான் உள்ளிட்ட உயிர்கொல்லிகளுக்கு எதிரான கருத்தரங்கில் கலந்து கொண்டேன், இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார், மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராஜன். எழுத்தாளர் நாஞ்சில்நாடன்  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டார்கள், இயல்வாகை என்ற சூழலியல் அமைப்பு இந்த உயிர்கொல்லி மருந்துகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு பயணத்தை நடத்துகிறது, அதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளைஞர்கள், உணர்ச்சிமயமாக அவர்கள் சூழலியல் சார்ந்து பேசுவதும் தீவிரமாகச் செயல்படுவதையும் காணும் போது உத்வேகமாக இருந்தது, இந்த நிகழ்வின் …

உயிர்கொல்லி Read More »

நாவலின் நரம்பு

உறுபசி – ஒரு பார்வை   –  ஆதவா தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. அது உறுபசி நாவலின் வழியே நீண்டு கொண்டிருக்கிறது. உறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி …

நாவலின் நரம்பு Read More »

அறிவிப்பு

கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம்  எனக்கு இந்த ஆண்டிற்கான கண்ணதாசன் விருது வழங்குகிறது, 50 ஆயிரம் பணமும் பட்டயமும் கொண்டது இவ்விருது,  அதைப்பெறுவதற்காக  கோவை வருகை தர இருக்கிறேன்,  25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் இருக்கிறேன்,  சந்திக்க விரும்பும் நண்பர்கள் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா புத்தகக் கடையைத் தொடர்பு கொள்ளவும். 26.06.2011 ஞாயிறு அன்று காலை பத்துக்கு கண்ணதாசன் விழா துவங்குகிறது, இதில் கண்ணதாசன் குறித்து கவிஞர் மு. அர்ச்சுனன் …

அறிவிப்பு Read More »

கதைக்கம்பளம்

1)      எனக்கு ஏன் கனவு வருது 2)      நீள நாக்கு 3)      எழுதத்தெரிந்த புலி 4)      பம்பழாபம் 5)      தலையில்லாத பையன் 6)      லாலி பாலே 7)      காசுக்கள்ளன் என குழந்தைகளுக்கான ஏழு புத்தகங்களை நானும் நான்காவது வகுப்பு படிக்கும் எனது பையன் ஆகாஷ் இருவருமாக இணைந்து வெளியிட்டிருக்கிறோம். இக்கதைகளை நானும் அவனுமாகப் பேசி விவாதித்து  உருவாக்கினோம், புத்தகங்களுக்கான எண்ணம் அவனுடையது, நான் எழுத்து வடிவம் தந்திருக்கிறேன். சில கதைகளில் அவன் கதையின் முக்கிய நிகழ்வுகளை மாற்றியிருக்கிறான், …

கதைக்கம்பளம் Read More »

நெடுங்குருதி : விசித்திரத்தின் அழகியல்

தீவிர இலக்கிய வாசகரும் எனது நண்பருமான கார்த்திகைப் பாண்டியன் நெடுங்குருதி நாவல் பற்றி எழுதியுள்ள விமர்சனம். •• ஒரு மனிதனின் அடிப்படை இயல்புகளைத் தீர்மானிக்கக் கூடிய விஷயங்கள்எவையெவை என்று சொல்லலாம்… அவர்களின் பிறப்பு? குடும்ப சூழ்நிலைகள்? நண்பர்கள் அல்லது உறவினர்கள்? இவை போக, இது எல்லாவற்றையும் மீறியஒன்றும் இருக்கிறது. அது  அவர்களின் ஊர்.. அவர்கள் வாழும் சூழ்நிலை. இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய எட்டாவது வயதில்குடும்பத்தோடு மதுரை சுப்ரமணியபுரம் பகுதிக்கு குடிபுகுந்தோம். அதுவரை வீடு …

நெடுங்குருதி : விசித்திரத்தின் அழகியல் Read More »

மாற்று சினிமா

கிராபியன் ப்ளாக் ஒரு இளம் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், திரைத்துறையிலும் பத்திரிக்கையிலும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார், அவரது இரண்டு புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன், ஒன்று மாற்றுசினிமா, மற்றது திரைப்படக்கல்லூரி ஆளுமைகள், இரண்டையும்  புதிய கோணம் என்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது இதில் மாற்றுசினிமா தமிழில் வெளியான 32 சிறந்த குறும்படங்களைப் பற்றியது, குறும்படத்திற்கான விமர்சனம் என்பதோடு. அந்த இயக்குனரைப் பற்றியும் குறும்படங்களின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான முதற்படி என்று சொல்வது சரியான ஒன்றே, இதன்வழியே புதிய …

மாற்று சினிமா Read More »

இன்னொரு பயணம்

கோடை மழை துவங்கியிருக்கிறது,  ஈரம் படிந்த காற்றுடன் பயணம் செய்வது அற்புதமானது ஜுன் 2 முதல் இருபது நாட்களுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன், அநேகமாக ஜுன் 21ல் சென்னை திரும்புவேன். ••