மலேசியத் தமிழறிஞர்
மலேசியாவில் வசிக்கும் தமிழறிஞரான டாக்டர் எஸ் ஜெயபாரதியின் எழுத்துகளை நான் விரும்பிப் படித்து வருகிறேன், பழந்தமிழ் இலக்கியம். ஆன்மீகம். விஞ்ஞானம், ஜோதிடம், தமிழ்பண்பாடு, நுண்கலை. வரலாற்று ஆய்வுகள் என்று பரந்த தளங்களில் சிறப்பாக எழுதிவருபவர், அவரது மலேசிய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய கட்டுரைகள் அற்புதமானவை, அவரது எழுத்து தேர்ந்த நகைச்சுவையும் செழுமையான மொழிநடையும் கொண்டது, டாக்டர் ஜெயபாரதி தேர்ந்த படிப்பாளி, அவரது எழுத்தில், வியக்க வைக்கும் தகவல்கள். நுட்பமான விபரங்கள். நேரடியாக கள ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட …