மலேசியத் தமிழ் சங்கத்தின் அழைப்பின் பெயரில் ஆகஸ்ட் 18 முதல் 25 வரை மலேசியா செல்ல இருக்கிறேன்,
இதில் ஆகஸ்ட் 19, 20 ,21 ஆகிய மூன்று நாட்கள் கோலாலம்பூரில் சிறுகதைப் பயிலரங்கினை ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறேன்,
மற்ற நாட்களில் மலேசியாவின் பினாங்கு. கெடா. ஈப்போ ஆகிய மூன்று இடங்களில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன,
விரிவான நிகழ்ச்சி நிரலை விரைவில் வெளியிடுகிறேன்,
இந்தப் பயணத்தின் போது மலேசியாவில் உள்ள இலக்கிய வாசகர்கள். ஆர்வலர்களைச் சந்திக்க விரும்புகிறேன், விருப்பமுள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.
••