மரியோ வர்கஸ் லோசா

மரியோ வர்கஸ் லோசாவிற்கு (Mario Vargas Llosa)2010ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், விமர்சன கட்டுரைகள், நாடகங்கள், அரசியல் கட்டுரைகள் என்று விரிந்த தளத்தில் இயங்கியவர் லோசா. பெருநாட்டு எழுத்தாளரான இவர் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார் . இவரது படைப்புகள் 31 மொழிகளில் வெளியாகி உள்ளன. 74 வயதிலும் பல்கலைகழகங்களில் தொடர்ச்சியாக  இலக்கிய உரைகள் நிகழ்த்துதல், நேரடியான அரசியல் ஈடுபாடு. சமகால படைப்பாளிகளை கொண்டாடுதல்  என்று …

மரியோ வர்கஸ் லோசா Read More »

காதலின் துறவி

டி.ஹெச். லாரன்ஸ் ஆங்கில இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை.  தனது எழுத்துகளால் தொடர்ந்த சர்சையும் தணிக்கை கெடுபிடிகளும் எதிர்கொண்டவர். இவரது ரெயின்போ நாவல் தடை செய்யப்பட்டு தீயிட்டு கொளுத்தபட்டவுடன்  இங்கிலாந்தை விட்டு தப்பி தன்மனைவியுடன் அமெரிக்கா சென்றார். பின்பு அங்கிருந்து மெக்சிகோ பயணமானவர். இந்த கொந்தளிப்பான நாட்களைப் பற்றிய திரைப்படமே Priest of Love படத்தை இயக்கியவர் Christopher Miles. 1912 ம் ஆண்டு லாரன்ஸ்  பிரைடா தியோபோனை சந்தித்தார். அவள் ஒரு பேராசிரியரின் மனைவி. அவர்கள் வீட்டிற்கு …

காதலின் துறவி Read More »

பசித்துயர்

கி.ராஜநாராயணன் தொகுத்த நாட்டார் கதைத் தொகுப்பில் பசி என்ற ஒரு கதை உள்ளது. இக்கதை மிக முக்கியமானதொரு மரபுக்கதை தீராதபசியில் உணவு தேடி அலைகிறாள் ஒரு பெண், அவளுக்கு ஏழு ஆண்பிள்ளைகள் இருந்தும் எவரும் அவளைக் கவனிக்கவில்லை, எட்டாவதாக பிறந்த மகளுடன் அவள் சாப்பிட ஏதாவது கிடைக்காதா என்று தேடுகிறாள். ஊரில் எவரும் அவளுக்கு உணவு தரவில்லை , பசியை அடக்கிக் கொள்ள குளத்து தண்ணீரையாவது குடிக்கலாம் என்று போனால் குளம் தண்ணீர் தர மறுத்து தண்ணீரைப் …

பசித்துயர் Read More »

தரமணியில் கரப்பான்பூச்சிகள்

என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும் அறிமுகமாகிக் கொள்வதேயில்லை. என் அடையாளமாக இருப்பது கரப்பான்பூச்சிமருந்து விற்பவன். அதுவும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பூச்சிக் கொல்லி நிறுவனமான வில்ஹெம் ஒபேரின் விற்பனைப் பிரதிநிதி என்ற அடையாள அட்டையிருக்கிறது. ஆகவே அது உங்களுக்குப் போதுமானது. எனக்கே கூட என்னுடைய பெயர் தற்போது கொஞ்சம் அசௌகரியமாகவே இருக்கிறது. பெயரைப் பொறுத்தவரை அது என்னோடு ஒட்டிக் கொள்ளவேயில்லை. வேலை மாறும்போது …

தரமணியில் கரப்பான்பூச்சிகள் Read More »

மகத்தான போராளி

நீண்ட நாட்களுக்குப்பிறகு நேற்றிரவு  மார்லன் பிராண்டோ நடித்த Viva Zapata படத்தை மறுபடியும் பார்த்தேன். பிராண்டோவின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று. கூடுதல் சிறப்பு இதை இயக்கியது எலியா கசன் . இந்த முறை பார்க்கும் அது ஈழத்தின் யுத்த நினைவுகளையும் , ஈழப்போராளிகளின் வீரமரணத்தையும் பெரிதும் நினைவூட்டியது. போராட்டமும் துயர நினைவுகளும் எல்லா தேசங்களிலும் ஒன்று போலதான் இருக்கிறது. படத்தைப் பார்க்க பார்க்க மனதில் ஈழப்போரின் வரலாறு பொங்கி மிகவும் உணர்ச்சிகரமாக்கியது. விவா ஷபாடா ஒரு போராளியின் …

மகத்தான போராளி Read More »

பெங்களுர் சந்திப்பு

பெங்களுரில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து  கொள்ள அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுகிழமை அங்கு வருவதாக உள்ளேன். ஒரு நாள் முன்னதாக அக்டோடபர் 2ல் வந்துவிடுவேன், அன்று நண்பர்கள் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வினை ஒழுங்குசெய்திருக்கிறேன். இது ஒரு திறந்த உரையாடலுக்கான நிகழ்வு. ஆகவே நண்பர்களுடன் கூடிப்பேசி ஒரு கோப்பைத் தேநீரைப் பகிர்ந்து கொள்வது தான் நிகழ்வின் பிரதானம். விருப்பமுள்ள நண்பர்கள் அனைவரும் வரலாம் நாள்: 2.10.10 சனிக்கிழமை நேரம் : மாலை …

பெங்களுர் சந்திப்பு Read More »

அபத்த இலக்கியம்

இரண்டு நாட்களின் முன்பாக மெக்சிகோவில் இருந்து Carlos  Solares என்ற எழுத்தாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் வெளியான எனது சிறுகதையான ராமசாமிகள் வம்ச சரித்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததுஎன்றுவியந்துபாராட்டியிருந்தார்.அத்துடன் அக்கதையை ஸ்பானிய மொழியில் வெளியிடுவதற்கான அனுமதி கேட்டிருந்தார். பெங்குவின் இந்தியா The Tenth Rasa: An Anthology of Indian Nonsenseஎன்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் எனது ராமசாமிகள் வம்ச சரித்திரம் சிறுகதை இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் லதா ராமகிருஷ்ணன் …

அபத்த இலக்கியம் Read More »

மத்தவிலாசம்

காளிதாசன், ஹர்ஷர், பாஷன் என்று தொடர்ந்து இரண்டு வாரங்களாகவே சமஸ்கிருதநாடங்களை வாசித்து வருகிறேன். நேற்று மத்தவிலாச பிரகசனம் என்ற நாடகத்தை வாசித்தேன் .இதை எழுதியது மாமல்லபுரச் சிற்பக்கலைக்குப் பெயர்பெற்ற மகேந்திரவர்ம பல்லவன். ஆயிரம் வருசங்களைத் தாண்டிய இந்த நாடகப்பிரதிகளை வாசிப்பது ஒரு தனித்த அனுபவம். இந்தியப் பண்பாட்டுச்சூழலில் நாடகம் எவ்வளவு முக்கியமான கலைவடிவமாக இருந்திருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் இவை. சமஸ்கிருத நாடங்கள் இன்று அதிகம் மேடையற்றம் செய்யப்படுவதில்லை. ஆனால் புதிய மொழியாக்கங்கள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழிலும் முக்கியமான சில …

மத்தவிலாசம் Read More »

நிகழ்வுகள்

youtube உள்ள எனது நேர்காணலின் ஏழு பகுதிகளுக்கான இணைப்புகள் இவை https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8 Part 1 https://www.youtube.com/watch?v=XJFGE_nbcZs Part 2 https://www.youtube.com/watch?v=ZaxK6Nhz6kA Part 3 https://www.youtube.com/watch?v=vZ3kormDsEI Part 4 https://www.youtube.com/watch?v=UTIefcrWq4Q Part 5 https://www.youtube.com/watch?v=7AfUg1PDrUM Part 6 https://www.youtube.com/watch?v=YaXZpPae0w8 Part 7 ** நேற்று ஷாஜியின் புத்தக உரையாடல் நிகழ்வில் இயக்குனர் மணி ரத்னம் அவர்களைச் சந்தித்தேன், மாறாத எளிய புன்னகை, வார்த்தைகளை எண்ணிச் செலவிடும் அவரது இயல்பு, மேடையில் அவர் பேசிய ஐந்து நிமிசப் பேச்சினுள் இயல்பாக …

நிகழ்வுகள் Read More »

நேர்காணல் வீடியோ

இலக்கியம். புத்தகவாசிப்பு. பயணம் சார்ந்த எனது விரிவான நேர்காணலை நண்பர் ராம்குமார் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார், ஏழு பகுதிகளாக உள்ள இந்த நேர்காணலின் முதல் பகுதி தற்போது யூடியூப் இணையதளத்தில்  உள்ளது, https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8