ஒளிராத நட்சத்திரம்
ஹாலிவுட் இயக்குனர்களில் பில்லி வொயில்டர் மிக முக்கியமானவர். இவரது The Apartment, Some Like It Hot, Sabrina, Double Indemnity,The LostWeekend போன்ற படங்களைதேடித்தேடி பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இவரது ஆகச்சிறந்தபடமாக நான் எப்போதும் கருதுவது சன்செட் பொலிவார்டு (SUNSET BOULEVARD). இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தை கறுப்புவெள்ளை காவியம் என்றே சொல்வேன். சினிமாவைப் பற்றிய சினிமா என்பது பெரும்பாலும் தோல்வியுற்ற வகையாகவே இருந்திருக்கிறது. அரிதாகவே ஒன்றிரண்டு படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பில்லிவைல்டரின் இப்படம் …