யானையின் கண்ணீர்.
jefferey mussaieff masson எழுதிய when elephents weep புத்தகத்தை வாசித்தேன் நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான புத்தகப்பட்டியலில் இந்த நூல் இடம் பெற்றிருந்தது. உளவியல் ஆய்வாளரான ஜெப்ரி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காடுமலை சுற்றி மிருகங்களை தொடர்ந்து அவதானித்திருக்கிறார். உளவியல் ஆய்வில் அமைந்த இந்த புத்தகம் மிக சுவாரஸ்யமான அனுபவம் தருவதாகயிருந்தது. தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்று தனிவகையே இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராவணன் என்பவர் எழுதிய சிந்தாமணி வைத்திய நூல்கள் ஒலைச்சுவடிகளாக நிறைய …