புர்ரா

– சிறுகதை. அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது அவளை காண்பதற்கே விசித்திரமாக இருந்தது. என்ன சொல் அது என்று புரியாமல் திரும்பி பார்த்தேன். சுகு உற்சாகமாக புர்ரா புர்ரா என்று கத்திக் கொண்டிருந்தாள். அவளது உற்சாகத்திற்காக ஒரு நிமிசம் அதை அனுமதித்த என்னால் …

புர்ரா Read More »

பத்து குறும்படங்கள்

சமீபத்தில் நான் இணையத்தில் பார்த்த குறும்படங்கள் இவை. இதில் ஹிந்தி திரையுலகின் முக்கிய இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் முதல்படம் உள்ளது. இப்படம் அவரது சமீபத்தைய தேவ் டி, குலால் போன்ற படங்களின் முன்னோடி முயற்சி என்பது தெளிவாக தெரிகிறது. அது போல ஈரானிய குறும்படங்களும் முக்கியமானவையே. மும்பை மற்றும் நியூ டெல்லியில் உள்ள தனியார் திரைப்படக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஹிந்தி குறும்படங்கள் சிலவற்றையும்  கண்டேன். இதில் ஒன்றிரண்டு மிக சிறப்பாக உள்ளது.  இந்த பட்டியலில் உள்ள மை …

பத்து குறும்படங்கள் Read More »

சிதறி வீழ்ந்த நட்சத்திரம்.

காசியபனின் அசடு தமிழ் நாவல்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  இந்த நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருசத்தின் பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது  இப்பதிப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் நகுலன். காசியபன் என்ற புனைபெயர் கொண்ட குளத்து 53வது வயதில் தான் எழுத துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய …

சிதறி வீழ்ந்த நட்சத்திரம். Read More »

துயரத்தின் சாலை.

சமகால சீனப்படங்கள் ஒரு பக்கம் ஹாலிவுட் படங்களோடு போட்டியிடும் ஆக்சன் படங்களாக வெளியாகின்றன. இன்னொரு பக்கம் மிக யதார்த்தமாக வாழ்வின் பன்முகங்களை நெருக்கமாக சித்தரிக்கின்றன. சமீப காலத்தில் நான் பார்த்த மிக சிறந்த படங்களில் பாதி சீனப்படங்களே. சீனாவின் புதிய தலைமுறை சினிமா என்று கொண்டாடப்படும் இந்த படங்கள் உலக திரைப்பட விழாக்களில் தனிகவனம் பெற்று வருகின்றன. பெரும்பான்மை படங்களின் அடித்தளம் எளிய மக்களின் வாழ்க்கையும் அதில் ஏற்படும் சிக்கல்கள் சிதைவுறும் கனவுகள் பற்றியதே. 2007ம் ஆண்டிற்கான …

துயரத்தின் சாலை. Read More »

பாலா. நெட்

தமிழ் சினிமாவின் தனித்துவமான ஆளுமையான  இயக்குனர் பாலா தனக்கென பிரத்யேக இணையதளம் ஒன்றினை உருவாக்கியீருக்கிறார். இந்த இணையதளத்தில் அவரது திரைப்படங்கள். நேர்காணல்கள் மற்றும் சுயவிபர குறிப்புகள் அவரை பற்றிய செய்திகள் கட்டுரைகள் வெளிவராத அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன. இந்த இணைய தளத்தில் இருந்து அவருக்கு  நேரடியாக மின்னஞ்சல்கள் அனுப்பும் வசதி உள்ளது. https://www.directorbala.net/

மைனா அலையும் பகல்

கடந்த வாரத்தில் திருச்சுழி, நரிக்குடி, பெருநாழி, கமுதி, மண்டலமாணிக்கம், பார்த்திபனூர். ஆர் எஸ்.மங்கலம், பரமக்குடி,  என்று ராமநாதபுர மாவட்டத்தின் உள்ளாகவே சுற்றியலைந்து கொண்டிருந்தேன். பனைமரங்கள், புழுதி பறக்கும் சீரற்ற சாலைகள். சாலையின் இருபுறமும் மண்டி கிடக்கும் வேலிச்செடிகள். உலர்ந்து வெடித்துபோன கண்மாய்கள், கண்ணுக்கு எட்டியவரை நடமாட்டமே இல்லாத அத்துவான வெளி. உலர்ந்தமேகங்கள்.உக்கிரமான சூரியன். வெயில் ததும்பும் கிராமவீதிகள். காலத்தின் முன்னோட்டத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டதோ எனும்படியாக தனித்து போயிருக்கும் ஊர்கள். தொலைக்காட்சி ஒன்று தான் கிராமங்களின் ஒரே …

மைனா அலையும் பகல் Read More »

மோனோநோகி.

ஜப்பானின் புகழ்பெற்ற அனிமேஷன் இயக்குனர் ஹயோ மியாசகி (Hayao Miyazaki  )இயக்கிய 1997ல் வெளியான Princess Mononoke படத்தை கடந்த ஒருவாரத்தில் நான்குமுறை பார்த்துவிட்டேன். சமீபத்தில் அவதார் திரைப்படம் ஏற்படுத்திய வியப்பை விடவும் பலமடங்கும் இந்த படம் என்னை பாதித்தது. தொழில்நுட்ப ரீதியாகவும் கற்பனையான கதை சொல்லும் முறையிலும் இதுவரை நான் பார்த்த அனிமேஷன் படங்களில் இதுவே ஆகச்சிறந்தது என்பேன். மியாசகியின் அனிமேஷன் படங்களை ஒவ்வொரு குழந்தைகளும் அவசியம் காணவேண்டும். குறிப்பாக சிறார்பள்ளிகள் மற்றும் பூங்காங்களில் இவை …

மோனோநோகி. Read More »

அவன் இவன்

தேசிய விருது பெற்றுள்ள இயக்குனர் பாலாவின் புதிய படமான அவன் இவன் படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன். இந்த படம் அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டது. படப்பிடிப்பு செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் பிப்ரவரியில் நடைபெறுகிறது.  என் நண்பர்கள் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், பாடலாசிரியர் நா. முத்துகுமார் என்று நட்புவட்டம் ஒன்று சேர ஒரு படத்தில் பணியாற்றுவது மிக சந்தோஷமான விசயம்.  நேற்று படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.  

சொல்லிய கதை

இரண்டு நாட்களின் முன்பு சேலத்தில் உள்ள ஹெலிக்ஸ் சிறப்பு பள்ளிக்கு சென்றிருந்தேன். வேடிக்கவுண்டர் காலனியில் இப்பள்ளி உள்ளது. அது டிஸ்லெக்சியாவால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி . தாரே ஜமீன்பரில் வருகின்ற சிறுவனை போன்றவர்களே இப்பள்ளி மாணவர்கள்.  இப்பள்ளியை செந்தில்குமார் நிர்வகித்துவருகிறார். இப்பள்ளியின் பாடத்திட்டங்களும் கற்று தரும் முறைகளும் தனித்துவமானவை. செந்தில் இஸ்ரேலில் மனநலவியல் பயின்றவர். கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்காக அவர் மேற்கொண்டுவரும் சேவை மிகுந்த பாராட்டிற்கு உரியது. இந்த பள்ளி மாணவர்களுக்காக ஒரு நாள் …

சொல்லிய கதை Read More »

கர்ண மோட்சம் தேசிய விருது

நான் கதை திரைக்கதை வசனம் எழுதி முரளிமனோகர் இயக்கிய கர்ணமோட்சம் குறும்படம் இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கிறது. சிறந்த கலை மற்றும் கலாச்சார பிரிவில் (Best Arts/Cultural Film )இக்குறும்படம் சிறந்த படமாக தேர்வு பெற்று ரஜத் கமல் விருதை பெற்றுள்ளது.  இப்படம் சென்னை எம்.ஜி. ஆர். திரைப்பட கல்லூரியின் சார்பில் தயாரிக்கபட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த படம் சிறந்த இயக்கம் சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட மூன்று தமிழக அரசின் விருதுகளுடன் இருபதிற்கும் …

கர்ண மோட்சம் தேசிய விருது Read More »