காருகுறிச்சியார்.
சில நாட்களுக்கு முன்பாக நாதஸ்வர மாமேதை காருகுறிச்சி அருணாசலத்தின் சொந்த ஊரான காருகுறிச்சிக்கு சென்றிருந்தேன். சிறிய கிராமம். அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது. ஊரின் நுழைவாயிலில் கையில் நாதஸ்வரத்துடன் உள்ள காருகுறிச்சியார் சிலை காணப்படுகிறது. சிலை செய்தவருக்கு காருகுறிச்சியார் மீது என்ன கோபமோ தெரியவில்லை. நாதஸ்வரம் வளைந்து நெளிந்து போயிருக்கிறது. காருகுறிச்சியின் பூர்வீக வீடு விற்கபட்டு தற்போது யாரோ குடியிருக்கிறார்கள். அந்த வீட்டில் இருந்த பெண்மணி அடிக்கடி …