ஜராதுஷ்ட்ரா.
கடந்த சில வருசங்களில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஆகச்சிறந்தது நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்ற புத்தகமே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. நீட்ஷேயை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரவி. இவர் குவளை கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். மாயா பஜார், பிள்ளை விளையாட்டு என்று இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. நீட்ஷேயின் ஒரு படைப்பு முழுமையாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். கடவுள் இறந்து போய்விட்டார் …