ஆங்கில மொழியாக்கம்

 


எனது சிறுகதையான பிழைதிருத்துபவனின் மனைவி Muse India  (Issue 30, Mar-Apr 2010) என்ற ஆங்கிலத்தில் வெளியாகும் இணைய இதழில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் ஆங்கில பேராசிரியர் சித்ரா. இந்த இதழை கவிஞர் பிரம்மராஜன் சிறப்பு எடிட்டராக இருந்து தயாரித்திருக்கிறார்.


இது போல எனது சிறுகதைகள், கட்டுரைகள் அல்லது நாவலை  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க  விருப்பம் உள்ள வாசகர்கள் , ஆர்வலர்கள் முன்வந்தால் அதை தனித்த நூலாகவோ அல்லது எனது இணையதளத்திலோ வெளியிட உதவியாக இருக்கும்.  இது குறித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் தொடர்ந்து செயல்படலாம்.


ஆங்கிலத்தின் சமகால தமிழ்படைப்புகள் மிக குறைவாகவே வாசிக்க கிடைக்கின்றன. ஆகவே இது போன்ற முயற்சிகளுக்கு அயல்தேசங்களில் வாழ்கின்ற ஆங்கிலமும் தமிழும் செழுமையாக அறிந்தவர்கள் முன்வர வேண்டும். அத்தகைய திறமைசாலிகள் நிறைய நம்மிடையே இருக்கிறார்கள்.


அவர்கள் முன்மாதிரியாக ஒரு சிறுகதையோ கட்டுரையோ மொழியாக்கம் செய்து பார்க்கலாம். அதனைத் தகுதியான எடிட்டர் வழியாக திருத்தம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம்.


இணைப்பு.


Ramakrishnan S : The Proofreaders Wife


https://www.museindia.com/showfocus19.asp?id=1578


**


 

0Shares
0