பௌத்த சினிமா -1 கர்மா
இரண்டு வேறுபட்ட பௌத்த பிக்குணிகளின் வழியே பௌத்த சமயத்தின் நம்பிக்கைகள். மறுபிறப்பு, மடாலய வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துகிறது இந்த நேபாளி திரைப்படம்
இரண்டு வேறுபட்ட பௌத்த பிக்குணிகளின் வழியே பௌத்த சமயத்தின் நம்பிக்கைகள். மறுபிறப்பு, மடாலய வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துகிறது இந்த நேபாளி திரைப்படம்
மாக்ஸ் லிண்டர் மௌனப்படங்களின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். பிரெஞ்சு நடிகரான இவரது பாதிப்பில் உருவானர் தான் சார்லி சாப்ளின். தனது கடிதம் ஒன்றில் சாப்ளின் லிண்டரைத் தனது குருவாகக் குறிப்பிடுகிறார். மாக்ஸ் லிண்டர் நடித்த Max Takes a Bath என்ற மௌனப்படம் 1910ல் வெளியானது. குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்ன அறிவுரைக்காக மாக்ஸ் ஒரு குளியல் தொட்டியை விலைக்கு வாங்குகிறார். அதைத் தனது வீட்டிற்குக் கொண்டுவருவதில் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் நகைச்சுவையாகக் …
புதிய குறுங்கதை 4.4.23 ஆன்டன் செகாவின் கதையிலிருந்த துப்பாக்கி திருடு போயிருந்தது. யார் அதைத் திருடியது எனத் தெரியவில்லை. ஆனால் அந்தத் துப்பாக்கி ஒரு வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. திருடு போன துப்பாக்கியைப் பற்றிச் செகாவிடம் எப்படித் தெரிவிப்பது என்று கதாபாத்திரங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை திருடியதும் வேறு ஒரு கதாபாத்திரமாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. செகாவ் தனது கதையிலிருந்த துப்பாக்கி திருடப்பட்டதை அறிந்து கொள்ளாமல் வேறு கதைகள் எழுதுவதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். சில கதாபாத்திரங்கள் …
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் R.ஜெயபால் . இவர் தனது வகுப்பு மாணவிகள் மாவட்ட மற்றும மாநில அளவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை;ப் பாராட்டும் விதமாக எனது புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார் . வகுப்பறைக்குள் புத்தகங்கள் செல்வது வரவேற்க வேண்டிய செயல். ஜெயாலுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
2022ல் வெளியான Turn Every Page — The Adventures of Robert Caro and Robert Gottlieb என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ராபர்ட் காரோ மற்றும் அவரது எடிட்டர் ராபர்ட் காட்லீப்பிற்குமான ஐம்பது ஆண்டுகால நட்பை விவரிக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் ராபர்ட் காட்லீப்பின் மகள் லிசி. இப்போது ராபர்ட் காரோவுக்கு வயது 86. காட்லீப்பிற்கு வயது 91 க்னாஃப் (Alfred A. Knopf )பதிப்பகத்தின் தலைமை பொறுப்பு வகித்த காட்லீப் …
நீலக்குதிரைகள் என்ற ஒவியம் பற்றிய எனது பதிவில் மேரி ஆலிவர் கவிதையை குறிப்பிட்டிருந்தேன். கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன் அதை முன்னதாக மொழியாக்கம் செய்து அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார். நேற்று இதனை அவரே அனுப்பி வைத்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு. நீலக்குதிரைகள் – மேரி ஆலிவர் நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை …
புகழ்பெற்ற The Turin Horse திரைப்படத்தை எப்படிப் பெலா தார் (BelaTarr) உருவாக்கினார் என்பதை விவரிக்கிறது Tarr Bela: I Used to Be a Filmmaker ஆவணப்படம். இளம் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் இதனை அவசியம் காண வேண்டும். திரைப்பட உருவாக்கத்தில் பெலா தார் எவ்வளவு தீவிரம் காட்டுகிறார். எப்படி ஒரு காட்சியைத் துல்லியமாக உருவாக்குகிறார் என்பதற்கான மாஸ்டர் கிளாஸ் போல இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது. ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் பெலா தார் …
ஃபிரான்ஸ் மார்க் வரைந்த புகழ்பெற்ற ஓவியமான Blue Horses பற்றி மேரி ஆலிவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அந்த ஒவியத்தினுள் செல்லும் அவரை நீலக்குதிரைகள் நெருங்கி வருகின்றன. தாங்கள் அறிந்த ஏதோ ரகசியத்தைச் சொல்ல முயல்வது போலக் காட்சியளிக்கின்றன. ஆனால் எதையும் சொல்லவில்லை என கவிதை முடிவு பெறுகிறது. உலகில் இன்னும் கருணை மீதமிருக்கிறது என்பதன் அடையாளம் போலவே இந்த நீலக்குதிரைகள் வரையப்பட்டிருப்பதாக ஆலிவர் கருதுகிறார். இந்த ஓவியத்தைக் காணும்போதெல்லாம் டால்ஸ்டாயின் நடனத்திற்குப் பிறகு என்ற …
டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூலை வாசித்துவிட்டு இரா.கவின் என்ற நான்காம் வகுப்பு மாணவர் எழுதியுள்ள கடிதம். கவினின் கடிதத்திற்கும் அழகான ஒவியத்திற்கும் நன்றி. வாசிப்பைத் தொடர வாழ்த்துகிறேன். கவின் கேட்ட கேள்விக்குப் பதில் : எறும்பின் வாழ்க்கை என்பது சில நாட்கள் தானே., ஆகவே கதை முடிவதற்குள் டான்டூன் இளைஞனாகி விடுகிறான்.