புதுமைப்பித்தன் நாடக நிகழ்வு
இரண்டு நாட்களும் புதுமைப்பித்தன் நாடகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நாடகத்தை மிக அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள். நிறைய இளைஞர்கள் நாடகம் காண வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. நாடக இயக்குநர் கே.எஸ்.கருணா பிரசாத், நடிகர்கள், மேடை அமைப்பு, ஒளியைக் கையாண்ட கலைஞர்கள். நாடகத்தைத் தயாரித்த கூத்துப்பட்டறைக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள். புதுமைப்பித்தன் குடும்பத்தினர், புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன், கண்மணி கமலாவிற்கு நூலை வெளியிட்ட இளையபாரதி, புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்பை உருவாக்கிய ஆ.இரா.வேங்கடாசலபதி. …








