1) எனக்கு ஏன் கனவு வருது
2) நீள நாக்கு
3) எழுதத்தெரிந்த புலி
4) பம்பழாபம்
5) தலையில்லாத பையன்
6) லாலி பாலே
7) காசுக்கள்ளன்
என குழந்தைகளுக்கான ஏழு புத்தகங்களை நானும் நான்காவது வகுப்பு படிக்கும் எனது பையன் ஆகாஷ் இருவருமாக இணைந்து வெளியிட்டிருக்கிறோம்.
இக்கதைகளை நானும் அவனுமாகப் பேசி விவாதித்து உருவாக்கினோம், புத்தகங்களுக்கான எண்ணம் அவனுடையது, நான் எழுத்து வடிவம் தந்திருக்கிறேன்.
சில கதைகளில் அவன் கதையின் முக்கிய நிகழ்வுகளை மாற்றியிருக்கிறான், புதிய கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறான். விளையாட்டுப் போல கதைகளை நாங்கள் கையாண்டோம்
சிறுவர் படிக்கும் புத்தகங்களை அவர்களோடு இணைந்து எழுதுவது உற்சாகமாகவே இருக்கிறது.
இந்தப் புத்தகங்களை பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான பிரிவு புக் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொன்றும் ரூ.25 மொத்தமாக வாங்கினால் ரூ.150 மட்டுமே.
புத்தகம் பேசுது
421, அண்ணாசாலை, சென்னை-600018
91-44-24332424
https://www.thamizhbooks.com/