ஏழுதலை நகரம்

சில தினங்களுக்கு முன்பாக லா.ச.ராவின் புதல்வர் சப்தரிஷியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது“ உங்கள் புத்தகங்களிலே மிகவும் பிடித்தது ஏழு தலை நகரம். அதை உப பாண்டவம் நாவலுக்கு இணையாகச் சொல்வேன். குழந்தைகளுக்கான நாவல் என்று சொன்னாலும் அது சிறுவர்கள் மட்டும் படிக்க வேண்டியதில்லை. பெரியவர்களும் படிக்க வேண்டும். இப்படி ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தை நான் படித்ததில்லை. என் மகள் அதை விரும்பிப் படித்தாள். நாங்கள் சேர்ந்து அந்தக் கதையைப் பலமுறை படித்திருக்கிறோம். கண்ணாடிக்காரத் தெருவும் அதில் நடக்க நடக்க ஒருவருக்கு வயதாகிக் கொண்டே போவதும் மிகப்பிரமாதம்“ என்றார்

ஏழுதலை நகரம் நேரடியாக நூலாக வெளியானது. அதுவும் விகடன் வெளியீடாக வந்து பத்தாயிரம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையானது

அதன் அடுத்த பதிப்பை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டது. தற்போது தேசாந்திரி பதிப்பகம் அதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

தினம் ஒரு நிறத்திற்கு மாறிவிடும் விநோத நகரம் ஒன்றின் கதையை விவரித்திருக்கிறேன்.

இந்த நாவல் வெளியான நேரத்தில் இதை ஒரு அனிமேஷன் திரைப்படமாக இயக்க விரும்பி ஒரு இயக்குநர் தொடர்பு கொண்டார். ஆயுத்தப்பணிகள் நடைபெற்றன. ஆனால் இதற்கான பட்ஜெட் கிடைக்காத காரணத்தால் திரைப்படப் பணி கைவிடப்பட்டது.

சப்த ரிஷியைப் போல இந்த நாவலுக்கெனத் தனியே வாசகர்கள் இருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சியின் போது இந்த நாவல் ஒன்றை மட்டும் கேட்டு வாங்கிப் போனவர்களை அறிவேன். விந்தையான உலகைச் சித்தரிக்கும் ஹாரிபோட்டர் போன்ற கதைகள் ஆங்கிலத்தில் ஏராளம் இருக்கின்றன. ஆனால் ஏழுதலை நகரம் போல நம் கதைமரபிலிருந்து உருவான விந்தை நாவல்கள் குறைவே.

இந்த நாவலின் இரண்டாவது பகுதியை எழுத வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  அடுத்த ஆண்டில் அதை நிச்சயம் எழுதுவேன்.

தொடர்புக்கு.

ஏழுதலை நகரம்

விலை ரூ 200.00

தேசாந்திரி பதிப்பகம்.

தொலைபேசி 044 23644947

https://www.desanthiri.com/shop/

0Shares
0