மரணவீட்டின் குறிப்புகள்

நவீன நாடகப்பயிலரங்காக விளங்கி வரும் தியேட்டர் லேப் நடிகர்களை முறையாகப் பயிற்சி தந்து உருவாக்குவதில் முன்னோடியாக விளங்குகிறது,

கூத்துப்பட்டறையில் பயின்ற ஜெயராவ் இதை நடத்துகிறார், அவர் ஒரு சிறந்த நடிகர், நாடக இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர், இவர் இயக்கிய சங்கீத பைத்தியம். மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் போன்றவை சிறப்பான நாடகங்கள்.

இவரது தியேட்டர் லேப்பின் சார்பில் இரண்டு வருசங்களுக்கு முன்பாக எனது நதி அறியாதது என்ற நாடகம் அலியான்சே பிரான்சேயில் நடைபெற்றது.

தற்போது அவர்கள் தஸ்தாயெவ்ஸ்கியின் THE HOUSE OF THE DEAD நாவலை மையமாகக் கொண்டு நான் எழுதிய மரணவீட்டின் குறிப்புகள் நாடகத்தை நிகழ்த்த இருக்கிறார்கள்,  நாடகம் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது

இந்த நாடகத்தை முன்னதாக முருகபூபதி பாண்டிச்சேரிப் பல்கலைகழகத்தில் நிகழ்த்தியிருக்கிறார், தற்போது தியேட்டர் லேப் தயாரிப்பது மரணவீட்டின் குறிப்புகளின் திருத்தப்பட்ட விரிவான வடிவம், ஒரு மணிநேரத்திற்கும் அதிகமானது.

அதற்காக அந்த நாடக நடிகர்களுக்கு தஸ்தாயெவ்ஸ்கியை அறிமுகம் செய்து இன்று காலையில் ஒரு  உரை நிகழ்த்தினேன், தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி பேசுவதற்கு ஒரு நாள் போதாது, என்றாலும் எளிய அறிமுகத்தின் வழியே அவரது படைப்புலகின் முக்கியத்துவத்தை உணரச் செய்தேன்,

ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலும் நடைபெற்றது, ஆர்வமாக கலந்து கொண்ட இளம் நடிகர்களின் உற்சாகம் பாராட்டுக்குரியதாக இருந்தது.

சென்னை, மேற்கு கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புத்தகக் கடையின் பின்புறமாடியில் உள்ள தியேட்டர் லேப்பின் அரங்கு அற்புதமான ஒன்று, மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நவீன நாடகங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் தியேட்டர் லேப்போடு தொடர்பு கொள்ளுங்கள். அவர்களது நாடக நிகழ்வுகளைப் பார்வையிட்டு உற்சாகப்படுத்துங்கள்

பார்க்க :

ஜெயராவ் இயக்கிய வைக்கம் முகமது பஷீரின் சப்தங்கள் நாடகத்தின் காணொளி.

https://youtu.be/NT-9I6jg-bM

**

••

0Shares
0