எனது ஆசான்களில் ஒருவரான கவிஞர் தேவதச்சனின் கவிதையுலகம் பற்றி விரிவான புத்தகம் ஒன்றை உருவாக்கி கொண்டிருக்கிறேன்.
அவருடன் இலக்கியம், தத்துவம், சினிமா, கரிசல் வாழ்க்கை, உலக கவிதைகள் என பல்வேறு விஷயங்கள் சார்ந்து ஏழு மணி நேர விரிவான நேர்காணல் செய்துள்ளேன்.
அரிய புகைப்படங்கள். தேவதச்சனின் கவிதையுலகம் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூல் சென்னை புத்தக கண்காட்சிக்கு வெளிவர உள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது.