வாசகசாலை

“வாசகசாலை”முகநூல் குழுமம், புத்தக வாசிப்பினை மேம்படுத்தும் விதமாக கடந்த ஒராண்டு காலமாக மாதம் ஒருமுறை ஒரு புத்தகம் பற்றிய கலந்துரையாடலையும், மூத்தபடைப்பாளிகளை கொண்டாடும் விதமாக ஆய்வரங்குகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.

வாசகசாலை அமைப்பின் முதலாமாண்டு  நிறைவு  ஜனவரி, 9 ம்தேதி சனிக்கிழமை  அன்று நடைபெற உள்ளது. இந்த  விழாவை முன்னிட்டு 2015-ல் வெளியான படைப்புகளில் சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து விருது  தர இருக்கிறார்கள்.

இதற்கான விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா மெட்ரிகுலேஷன் பள்ளி கலையரங்கத்தில், ஜனவரி, 9 ம்தேதி சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை நடைபெறுகிறது.

நண்பர்கள் அனைவரும் இவ்விழாவில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
••

வாசகசாலையின் முதலாண்டு விழாவிற்கான எனது வாழ்த்துச் செய்தி

https://www.youtube.com/watch?v=FN6BTPY8xcM

0Shares
0