புத்தாண்டு இரவு

புத்தாண்டு இரவை டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன்  கொண்டாடினேன்.  நிறைய வாசகர்கள், நண்பர்கள் வந்திருந்தார்கள்.

சரியாக 12 :05க்கு எனது சிறார் நாவலான ஏழு தலை நகரத்தின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது.

நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட  நண்பரும் இயக்குனருமான பாரதி  கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு பிரதியை நண்பர் பால நந்தகுமார் பெற்றுக் கொண்டார்.

புத்தாண்டு துவங்கியதும் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் இதுவே என பாரதி கிருஷ்ணகுமார் மகிழ்ச்சியோடு பாராட்டினார்.

வாசகர் எழுத்தாளர் உறவு பற்றி உரை நிகழ்த்தினேன்

புத்தகங்களோடு புத்தாண்டினை வரவேற்பது புதிய கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.

டிஸ்கவரி புக் பேலஸ் புத்தாண்டு நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தது. பாராட்டுகள் வேடியப்பன்.

தங்கள் நண்பர்களுக்குப் புத்தகங்களை வாங்கிப் பரிசு தந்த பலரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது

விடிகாலை நாலு மணி வரை   பாடல். உரை, நையாண்டி நாடகம்,  கலந்துரையாடல் என உற்சாகம் தொடர்ந்தது என்றார் வேடியப்பன்.

புத்தாண்டு இனிதாகத் துவங்கியுள்ளது

அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய புத்தாண்டு வாழ்த்துகள்

••

0Shares
0