இன்று காலை நடைபெற்ற தி இந்து லிட் பார் லைப் இலக்கியவிழாவில் கலந்து கொண்டு தமிழ் சிறுகதை குறித்து உரையாற்றினேன்.
மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள்.
எழுத்தாளர் ந.முத்துசாமி நிகழ்வைத் துவக்கி வைத்தார். .
எனக்கு முன்பாக எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்பானதொரு துவக்கவுரையை வழங்கினார்.
தமிழ் சிறுகதை நூற்றாண்டினைக் கொண்டாடும் தி இந்து தமிழ் நாளிதழுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
